ஆலயக்கலை, ஹம்பி- சாம் ராஜ்

ஆலயக்கலைப் பயிற்சிமுகாம் மீண்டும்….

ஏழு ஆலயக்கலை வகுப்புகள் முடிந்துள்ளன. பங்கேற்றவர்களில் ஐம்பதுபேர் இணைந்து ஹம்பிக்குச் சிற்பக்கலைப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அதில் பங்குகொண்ட சாம்ராஜ் எழுதிய கடிதம்

ஹம்பியும் “ஒரு யோசனைக்காரர்களின்” பயணமும்.


அன்புமிக்க ஜெயமோகன் ,

ஆலயக்கலை வகுப்பின் தொடர்ச்சியாக ஜே.கேவும் அஜீதனும் ஹம்பிக்கு ஒரு பயணத்தை ஒருங்கினைத்தனர். 45 பேர். சென்னையிலிருந்து ஒரு பெரிய குழுவும்பெங்களுரிலிருந்து ஒரு சிறிய குழுவும்வெவ்வேறு ஊர்களிலிருந்து ஒருவராகஇருவராகமூவராக போய் சேர்ந்தோம்.

பயணம் சென்னை ரயிலிலேயே துவங்கி விட்டது. கம்பராமாயண வாசிப்பை பார்கவிசினிவாசன்லட்சுமி நாராயணன்  நிகழ்த்தஅடுத்த கூபேவிலிருந்து ஒரு இந்தி ஒட்டக்கூத்தர் விடாது தன் மொபைல் வழி பத்து நூற்றாண்டு கழித்தும் கம்பரை தொந்தரவு செய்தார். எங்களை கடந்து போகும் ரயில்வே பரிசோதகர்பயணிகள் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். 6 பேர் அமரும் கூபேயில் 20 பேர் இருக்கிறார்கள். ஒரு சத்தமும் இல்லை. யாரோ வாசிக்க மற்றவர்கள் தீவிரமாய் அதை கவனிக்கிறார்கள்.

இந்த பயணம் முழுக்க அப்படி வியப்பு நிறைந்த கண்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தோம். கோவிலில்மண்டபங்களில்துங்கப்பத்திர நதிகரையில் என.

நடுவில் ஒருவர் உயரமாய் நிற்கிறார். அவரை பார்த்தால் சம்பிரதாயமான வழிகாட்டி போலவும் இல்லை. ஆனால் சுற்றியிருப்பவர்கள் கூர்ந்து அவர் சொல்வதை கேட்கிறார்கள். பல கோவிலில் நாங்கள் கூடி நின்று சிற்பத்தை பார்க்கையில் அங்கு எதோ அபூர்வமாக இருக்கிறது என்று எங்களை கடந்து போய் பார்த்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தார்கள்.

முன்று நாட்களும் ஜே.கே சீக்கிரம் சீக்கிரம் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு இந்த முன்று நாட்களில் எவ்வளவு கூடுதலாய் முடியுமோஅவ்வளவு எங்களுக்கு காட்டி விட வேண்டும் என்ற ஆர்வம்.

இந்த முன்று நாட்களும் காலை புறப்பட்டால் இரவு தான் அறைக்கு வந்து சேர்வோம். அதன் பின் முன்னிரவில் விஷ்ணுபுர நாவல் வாசிப்புகம்பராமாயணம் என ஒரு நாள் போகமறு நாள் ஜே.கே விஜயநகர பேரரசு குறித்து ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

சுந்தர ராமசாமியின் நாவல் தலைப்பு போல ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்றே நாங்கள் பயணப்பட்டிருந்தோம். விஜயபாரதி தன் இரு பெண் குழந்தைகளுடன் வந்திருந்தார்.

இந்த பயணத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன் சார். 45 பேர் கொண்ட பயணமென்பது பொதுவாக குடும்பங்களுக்கிடையேபகுதி சார்ந்துநிறுவனம் சார்ந்தே நிகழும். அது முடியும் பொழுது மனகசப்புகளும்பூசல்களும்ஏமாற்றங்களுமே எப்பொழுதும் மிஞ்சும்.

இந்த ஹம்பி பயணத்தில் ஒருவர் கூட ஒரு முறை தன் நலனை முன் வைக்கவில்லை. இது கற்றலுக்கான பயணம். அதற்கு கீழ் தான் மற்ற அனைத்தும் என்ற புரிதல் பயணத்தை மேலும் மகிழ்ச்சியாக்கி கொண்டேயிருந்தது. ஹார்லிக்ஸ் குடித்த பின் அதில் கரையாமல் ஒட்டியிருக்கும் அதன் துணுக்கு போல இப்பொழுதும் இனிப்பாகவே இருக்கிறது.

விஜயபாரதி இரண்டாவது குழந்தைக்கு முதல் நாள் மாலையிலிருந்து உடல் நலம் கொஞ்சம் சரியில்லை. அப்படியாகும்பொழுது சம்பந்தப்பட்டவர் மொத்த பயணத்தையும் தனது தனிப்பட்ட சிக்கலுக்காக குலைப்பார். ஏறக்குறைய முன்பு தொலைக்காட்சியின்  தேசிய ஒளிப்பரப்பில் தலைவர்களின் மறைவின் பொழுது நாள் முழுக்க ஒருவர் சோக வயலின் வாசிப்பது போல மொத்த சூழலும் மாற வேண்டுமென எதிர்ப்பார்ப்பார்.

பாரதி அதை ஒரு சொல்லாக கூட யாரிடமும் சொல்லவில்லை. கேட்டவர்களிடம் மாத்திரம் சொன்னார். பாரதியின் இந்த மனநிலை தான் அங்கு எல்லோரின் மனநிலையாக இருந்தது.

இது உங்களின் ஆகசசிறந்த பங்களிப்புகளில் ஒன்றென நான் கருதுகிறேன் சார். கற்றலே பிரதானம். அதற்கே நாம் எல்லோரும் கூடியிருக்கிறோம் என்ற ஒன்றுபட்ட புரிதலை நீங்கள் உருவாக்கி தந்திருக்கிறீர்கள்.

புரந்தரதாச மண்டபத்தில் துங்கபத்திரை கால்களை நனைக்க கல்யான்ஜி கவிதைகளிலிருந்து சிற்பம்கோவில்பயணம் குறித்து எழுதப்பட்ட கவிதைகளை வாசித்தோம்.

மூன்றாவது நாள் மாலையில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் பாடல்களை பாடியபடி ஹம்பியின் பாறைக்கு பின்னால் சூரியன் மறைய, இருட்டு மெல்ல ஆற்றிலிருந்து மேலேறிவர, பரிசல்கள் கரையில் குப்புற படுத்து உறங்கத் துவங்க  குழுக் குழுவாக பிரிந்தோம்.

ஜே.கேவின் தனித்தன்மையென்பது ஒரு சிற்பத்தை காணும் பொழுது அதன் புராணீகம்சிற்பத்தின் அழகியல்அமைப்புஅது தொடர்பான வரலாறுபழந்தமிழ் பாட்டுபாசுரம் என எல்லாவற்றையும் ஒரு கோட்டில் சரடாக இணைத்துக் காட்டுவதே. அயராத ஆசிரியன் ஜே.கே.

ஹம்பி வைரச்சந்தை

மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் போல தன் மானசீக முழக்கோலுடன் எல்லாவற்றையும் அளந்துக் கொண்டிருந்த தச்சர் முருகேசன், வேறு வழியே இல்லாமல் பைக்கை புறந்தள்ளி இரயிலில் ஹம்பிக்கு வந்து பாய்ந்து பாய்ந்து எல்லோரையும் எல்லாவற்றையும் படமெடுத்த மதுரைக்காரர் செல்வக்குமார், மாதங்கர் மலை ஏறலாம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முன் அங்கிருக்கும்இளைஞர்மருத்துவர் ராஜேந்திரன், ஜே.கே சொல்வதை மறுபடியும் தீவிரமாக கேட்க வேண்டுமென்று எல்லாவற்றியும் ஒளிப்பதிவு செய்துக் கொள்ளும் சிங்கப்பூரர் கணேஷ். தற்காலிகமாக மதுரைஉள்நாட்டுமோதல்களை ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கும் வழக்கறிஞர் வேலு, காரைக்குடியில் மூன்று நாள் குழந்தைகளை அழவிட்டு அல்லது சிரிக்க விட்டு விட்டு வந்த மருத்துவர் அறிவழகன், தன் கேள்விகளால் கூர்மை படுத்தும் அஜிதன், புதிய வேலையில் சேர்வதற்கான இடைவெளியில் இந்த பயணத்தை மேற்கொண்டே தீர வேண்டும் என்று வேட்கையோடு வந்த குக்கூ சத்யா, மற்றவர்களை வரைந்து மகிழ்ச்சிபடுத்தும் ஓவியர் ஜெயராம். அமைதியை சட்டைக்கு மேல் மேல்கோட்டு போல் அனிந்து கொள்ளும் கோவை ரதீஷ், வடகரை முத்து, பெங்களுர் ராமகிருஷ்ணன். சகட்டு மேனிக்கு படமெடுத்து தள்ளும் மதுரை பிரபு, ஹம்பியில் இருந்து அப்படியே பதாமி போன விஷ்னு. பரவசமாய் தனது அனுபங்களை முன்வைக்கும் சரண்யா, அன்பான பாலா, சுந்தரபாண்டியன், கற்பகம். நாளொன்றுக்கு பத்துமுறை அடுத்த பயணம் எப்பொழுது என்று ஜே.கேவிடம் கேட்டுக் கொண்டே இருக்கும் பெங்களூர் அட்சயா, ”அடுத்த பயணத்தில் விட்டுட்டு போயிராதீங்க தலைவாஎன்று சொல்லும் லிங்கராஜ் இமைக்கா. கிருபா, சைதன்யா, அருண்மொழி நங்கை என எல்லோரும் கூடியே இந்த பயணத்தை கற்றலின் இனிமையாக்கினோம்.

திரும்பி வரும் பொழுது அதே ஆறு பேர் கொண்ட கூபேயில் இம்முறை 25 பேர். ஒவ்வொருவரும் தனக்கு இந்த பயணம் என்ன தந்தது என்பதை பேசினோம். பெங்களுர் அட்சயா வென்முரசிலிருந்து இந்த வரியை ஏறக்குறைய சொன்னார்கள். பின்னதாக தேடி எடுத்து அனுப்பினார்கள்

“அச்சொல்லை அவன் அறிந்திருப்பதாகக்கூட எண்ணிக்கொண்டான்அவர் முகத்தைப் பார்த்தாயாவெண்பட்டால் மூடப்பட்ட வாள் போல என்றான் தருமன். அர்ஜுனன் புன்னகைத்தான். உடல்கள் நெருக்கமாக இருந்தால் உள்ளங்களும் ஒன்றாகிவிடும் என்று நினைத்ததும் பீமன் திரும்பி புன்னகை செய்தான்“.

ஒரு யோசனைக்காரர்களாக அத்தனை பேரின் மனமும் ஒன்று இனையும் பொழுது நேர்மறையான உணர்வு அங்கு பொங்கி எழுகிறது.

இதுவே இந்த பயணத்தை இத்தனை ஆக்கபூர்வமானதாக ஆக்குகிறது சார். அந்தஒரு யோசனைக்காரர்களாகஎல்லோர் மனதையும் மாற்றும் மாயத்தை நீங்களே நிகழ்த்துகிறீர்கள். மனதின் அடியாழத்திலிருந்து நன்றி சார்.

வணக்கத்துடன்,
சாம்ராஜ்.

முந்தைய கட்டுரைவெண்முரசின் நிலம்
அடுத்த கட்டுரைபனை, கடிதங்கள்