வணக்கம் சார்,
தமிழக கல்வெட்டுகளை தொகுத்து அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது (Inscription Database)
http://udhayam.in/tnarch/tnarch-db.php
கல்வெட்டுகளை தேடும் வசதியும், மாவட்டம், வட்டம், ஊர், மொழி, அரசு, மன்னர், மொழி, எழுத்து தனித்தனியாக தேடி பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தகவல்களை அகர வரிசைப்படுத்தி பார்க்கவும், Details என்ற பட்டனை கிளிக் செய்தால் அதில் கல்வெட்டுகளில் பொது தகவல்கள் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும், ARE Reference, Pre published detail, இடங்கள், குறிப்புரை மற்றும் அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களுக்கு நேரடியாக செல்லும் வசதியும் உள்ளன.
கல்வெட்டு அமைப்பைக் கொண்டு எந்த வகை (கோயில், நடுகல், தனிக்கல்), Keyword (கொடை, கூட்டம், சமயம், இடம், கருவி, மாதம், நட்சத்திரம் மற்றும் முக்கிய வார்த்தைகள் அறியலாம்.
புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய ஊர், வட்டம், மாவட்டம் போன்றவைகள் அதன் வட்டம், மாவட்டம் மாறி உள்ளதால் அதன் இடங்களை சமகாலத்தில் உள்ளது போல தேட வசதியாக மாற்றப்பட்டுள்ளது.
(உம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்கள் தற்சமயம் மாறி இருக்கும் மாவட்டங்களாக)
புதிய கல்வெட்டுகளா என அறியும் முன்னர் இந்த தளத்தில் கல்வெட்டு முன்னர் பதியப்பட்டதா என்றும் அறிய முடியும்.
—
http://udhayam.in இணையதளத்தில் தற்போது
கல்வெட்டு தரவுதளம் (Inscription Database)
கல்வெட்டு தரவு புள்ளி விவரம் (Inscription Chart)
கல்வெட்டு அகராதி & சொற்களஞ்சியம்
கல்வெட்டு காலவரிசை (Inscription Timeline)
பட வரைபடம் (Imagemap)
உதயம் எழுத்துரு
கோல சுரபி சேர்க்கப்பட்டுள்ளன.
தளத்தில் இனி ஒவ்வோரு மாதமும் படங்கள், காணொளி, தொல்லியல், கல்வெட்டுக்கான Database மற்றும் அதன் Chart, Statistics, மற்றும் WEBTOOLS ஆகியவை பதிவேற்றம் செய்யப்படும்..
நன்றி
உதய்சங்கர்