வழி- ஆவணி இதழ்

அன்பு நிறை ஜெ,

ஆவணி/ஆகஸ்ட் 2023 வழி இதழில் எழுத்தாளர் தி.ஜானகிராமன் 1979 இல் கணையாழி இதழில் எழுதிய அந்தமான் பயணக்கட்டுரை “காலா பாணி” மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. எந்த குறைவும் இல்லாமல் தி.ஜா தன் எள்ளல் மொழியில் பயண அனுபவத்தை எழுதியுள்ளார். அவரின் “கருங்கடலும், கலைக்கடலும்”, “உதயசூரியன்”, “நடந்தாய் வாழி காவேரி” ஆகிய பயண கட்டுரைகளை தாண்டி பரவலாக வாசக கவனத்தை பெறாத மூன்று பயண கட்டுரைகள் கிடைத்துள்ளது. இவற்றில் “காலா பாணி” ஒன்று, மீதி இரண்டு கட்டுரைகள் வரும் மாதங்களில் வழி இணையதளத்தில் வெளிவரும்.

மேலும் இந்த இதழில்,  “கசபத்” நாவலின் ஆசிரியர் சாளை பஷீர் அவர்களின் வடகிழக்கு மாநில பயண அனுபவங்கள் “என் வானம் என் சிறகு” வெளியாகிறது. சாளை பஷீரின் மொழி தனித்துவமானது, தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் புழங்கும் சொல்லாட்சிகளும் பகடிகளும் வெளிப்படுவது. இந்த கட்டுரைகள் இயல்பான மொழி நடையில் அமைந்துள்ளது, வடகிழக்கு மாநிலங்களுக்கு தரைவழி பயணம் செய்து வந்த அனுபவத்தை வாசகர்களுக்கு அளிக்கும் என எண்ணுகின்றேன்.

இந்த பயண கட்டுரை பரிசல் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளது, வாய்ப்பிருக்கும் நண்பர்கள் புத்தகமாக இந்த கட்டுரைகளை வாசிக்கலாம்.

நன்றி,
இளம்பரிதி

வழி இதழ்

முந்தைய கட்டுரைபுதிய புல்வெளிகள்…
அடுத்த கட்டுரைஉள்ளம், கடிதம்