கவிதைகளின் எளிமை,கடிதம்

அன்புள்ள ஜெ,

கல்பற்றா நாராயணனின் தொடுதிரை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வருகின்ற “ஆறுதல்” என்ற கவிதை என்னை புரட்டிப்போட்டுவிட்டது.

எந்த படிமமும் குறியீடுகளும் இல்லாத மிகவும் எளிமையான கவிதை. ஆனால் எளிமையை விஞ்சும் ஆற்றல் வேறு எதற்குதான் உள்ளது?. போகிற போக்கில் சொல்லிச் செல்வது போல மிகவும் இயல்பாக வந்து அமைந்திருக்கிறது சொற்கள்.

கடைசியாக ஒரு கவிதையை படித்து இப்படி சிலிர்த்துக் கலங்கியது சாம்ராஜின் “அவள் நைட்டி அணிந்ததில்லை” என்ற கவிதையை படித்த போதுதான்.

ஒற்றை கவிதை ஒரு நாளையே அழகாக்கிவிடுகிறது, ஜெ. இந்த கவிதையை தமிழில் அருமையாக மொழியாக்கியமைக்கு மிக்க நன்றி.

– மணிமாறன்

கல்பற்றா நாராயணன் – தமிழ் விக்கி

தொடுதிரை கவிதைத் தொகுதி வாங்க

அன்புள்ள ஜெ

கல்பற்றா நாராயணனின் தொடுதிரை கவிதைகள் வாசித்தேன். நான் அதிகமும் கவிதைகள் வாசிப்பவனல்ல. எனக்கு கவிதைகள் பெரும்பாலும் புரிவதுமில்லை. ஆனால் இந்த தொகுதியிலுள்ள எல்லா கவிதைகளுமே துல்லியமாக்ப் புரிந்தன. அதிரச்செய்யும் கவிதைகளும் இருந்தன. நான் ஒரு பூனையை ஒருமுறை கனவிலே கண்டேன். அது சாவின் வடிவம் என்று எனக்கு தோன்றியது. இந்த தொகுதியிலிருக்கும் காலத்தலைவன் அப்படியே அந்த கனவின் உணர்ச்சிகளைக்கொண்ட கவிதை.

சங்கரநாராயணன்
சிவாஜியும் தொடுதிரையும் – கடிதம்
தொடுதிரையின் மேல் விரல்கள்
கவிஞனுடன் இருத்தல்
முந்தைய கட்டுரைஆலம் – இசை- கடிதம்
அடுத்த கட்டுரைவைணவங்கள் உரை- கடிதம்