நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் நகர வாழ்வின் அல்லல்களையும், அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தினார். இளமையிலிருந்தே தனக்கேற்பட்டிருந்த மனநோய்க் கூறுகளைத் தனக்கான படைப்புலகை சிருஷ்டிப்பதற்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு மனப்பிறழ்வு கொண்ட மனிதர்களின் குரலையும் அவர்களுடைய பித்துமொழியையும் அபூர்வ நடத்தைகளையும் பதிவுசெய்தார். கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் தமிழின் மிகச்சிறந்த பின்நவீனத்துவப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கோபி கிருஷ்ணன்
