தியானப் பயிற்சி அனுபவ பகிர்வு

அன்புள்ள ஜெயமோகன்,

நான் நன்றாக இருக்கிறேன்.   உங்களுக்கு முதல் மெயில் அனுப்பி 4 மாதம் ஆகிறது.  அப்போது விட இப்போது ரொம்ப நல்லாவே இருக்கேன்.

எப்படி இருந்தேன்?   என்னோட பாத்ரூம்ல மொத்தம் 4 குழாய், ஒரு ஷவர்  knob, ஒரு தாழ்ப்பாள்,  ஒரு சுவிட்ச்.   ஒவ்வொரு முறை உள்ள போகும்போதும், வரும்போதும் இது எல்லாத்தையும் மினிமம் ஒரு முறையாவது  (அதற்கு மேலயும்) தொட்டுட்டு தான் வருவேன்.  தொடாம வந்தா தொட சொல்லி தோனிகிட்டே இருக்கும்.   அந்த தோன்றுதல அடக்குவதற்காக தொட்டுட்டே வர்ரது பழக்கம் ஆகிடுச்சு.    என்னோட கட்டிலுக்கு நாலு கார்ணரையும் டெய்லி பத்து முறைக்கு மேல கையாளையும், என்னோட கற்பனையாளையும் தொடுவேன்.   என்னோட bag  ஹேண்டில், வாட்டர் பாட்டில் கேப், டோர் லாக், கேட் லாக், சைக்கிள் ஹாண்டில், மட்கார்டு, சைக்கிள் சீட்டு இப்படி நிறைய தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு.   என்னோட ஆபீஸ்ல இருக்குற டேபிள், கம்ப்யூட்டர், வாட்டர் கேன், அட்டன்டன்ஸ், அதோட கார்னர்ஸ் இப்படி லிஸ்ட் ரொம்ப பெருசா இருந்துச்சு.  எல்லாத்தையும் சேர்த்து, ஒரு நாளில் மினிமம் ஆயிரம் முறையாவது தொட்டு இருப்பேன்.

எனக்கு நிறைய சின்ன சின்ன விஷயத்துல பயம்.  ஹாஸ்பிடல்னா ரொம்ப பயம்.  அதுவும் இது ஓசிடி யா இருக்குமோ.  சைக்காட்ரிஸ்ட் கிட்ட போகணும்.  அப்படின்னு ரொம்ப பயம்.   எப்படியோ மேனேஜ் பண்ணிக்கிட்டு இருந்துகிட்டேன்.  இத்தனை வருஷமா.  எத்தனை வருஷம்னா பத்துக்கும் மேல இருக்கும்.   அப்பப்போ இருக்கிற இடம், சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தொடுர பொருள் தான் வேற வேற.  யாருக்கும், ரொம்ப நெருக்கமானவர்கள் கிட்ட கூட இதை சொன்னதில்லை.

நான் செய்கிற எல்லா செயலிலும் ஏதாவது ஒரு கம்பல்சன், இந்த மாதிரி இருந்துகிட்டே இருக்கும்.  இந்த மெயில் எழுதும் போது கூட ஒரு கம்பல்சன் எனக்கு இருக்கு.   அதை என்னால பாக்க முடியுது.  இப்படி ஒரு கண்டிஷனிங்ல நான் இருக்கேன்.  இருந்தேன்.  இப்போ அதுல இருந்து நான் மீண்டு கொண்டே இருக்கேன்.

ஒரு மூணு மாசமா தில்லை சார், சொல்லி தந்த பயிற்சிகளை  செஞ்சுகிட்டு வரேன். பயிற்சி செய்ய ஆரம்பிச்சதுக்கான காரணம் வேற.  ஆரம்பத்துல பயிற்சி செய்யும்போது, செய்யாமல் இருக்க எனக்கு நிறைய சாக்கு போக்குகள், மனத்தடைகள் இருந்துச்சு.  அதையும் எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தில்லை சார், சொல்லி தந்தார்.   கொஞ்சம் கொஞ்சமா இப்ப நான் தொடுற பொருட்களோட எண்ணிக்கை குறைந்து வருது.    அது ஏன், எப்படி – னும் தில்லை சார் விளக்கம் சொன்னாங்க.    இது சின்ன விஷயமா தெரியலாம்,  ஆனா இது எனக்கு பெரிய விடுதலையோட  ஆரம்பம்.    இந்த மாதிரி என்னோட நிறைய பயம், கவலைகள், காதல் தோல்வி, இப்படி லிஸ்ட் நிறைய இருக்கு.   அதிலிருந்து எல்லாத்துக்கும் இந்த தியான பயிற்சி என்னை  மீட்டுக் கொண்டே வருகிறது.

இந்த பயிற்சிக்கு வருவதற்கு முன்னாடி நிறைய செல்ப் டெவலப்மெண்ட் புக்ஸ், ஓஷோ புக்ஸ் எல்லாம் படிச்சிருந்தேன்.   அதெல்லாம் எனக்கு ஒரு அறிவாக இருந்துச்சு.   ஆனா இந்த தியான பயிற்சி தான் எனக்கு அனுபவ பூர்வமா மாற்றம் கொண்டு வந்து இருக்கு.    பல விஷயங்களில் இருந்து என்ன மீட்டு கொண்டு வருகிறது.    இந்த பயிற்சி செய்வதினால் நான் தியான நிலைக்கு போனேனா?  அதெல்லாம் எனக்கு தெரியாது.  ஆனால் இந்த தியான பயிற்சி செய்யறதுனால எனக்கு நல்ல பயன் இருக்கு.   இத கூட சொல்றது எனக்கு தயக்கம் இருந்துச்சு. நான் நல்லா இருக்கேன்னு  வெளியே சொன்னா,  அந்த நல்லது கெட்டுப் போயிடுமோ, அப்படி என்ற பயம்.  ஆனா அந்த பயமும்  இப்ப கொறஞ்சு, இத சொல்ற இடத்துக்கு வந்து இருக்கேன்.

ரொம்ப நன்றி தில்லை சார்!

*தயவு செய்து பெயர் வெளியிட வேண்டாம், Initial  கூட வேண்டாம்*

முந்தைய கட்டுரைகேண்மை தேரல்
அடுத்த கட்டுரைசிறுமியின் தஞ்சை