நான் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கும்போது MA தமிழ் இலக்கியப் பிரிவில் நா.காமராசனின் “கறுப்பு மலர்கள் ” என்ற கவிதைத் தொகுப்பினை பாடமாக வைத்திருந்தார்கள்.தற்செயலாக வாசித்தேன்.புதிய சொல்லாட்சி;மாறுபட்ட சிந்தனை.எனது வாசிப்பு ரசனையை திசை திருப்பியது.
அவருடைய அரசியல் கட்டுரையை தென்னகம் என்ற பத்திரிகையில் வாசித்தேன்.வசமிழந்தேன்.திரைஇசைப் பாடல்களில் கூட புதுக்கவிதையை முதலில் புகுத்தியவர் நாகாதான்.எம்ஜிஆர் மாத்திரமே அதிகம் பயன்படுத்திக்கொண்டார்.
பின் அவரது “நிலாகால புலம்பல்கள்” உட்பட ஏராளமான படைப்புகளை படித்துத் திளைத்தேன்.ஏனோ அவரின் பிற்கால வாழ்க்கை அவ்வளவு சோபிதமாய் இல்லை.
தூசு படிந்த அவரது ஞாபக எழுத்துக்களிலே என்னைத் தோய்த்துப் பிழிகிறேன்.