க.சீ.சிவக்குமார், நினைவு, ஒரு கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் 2006,2007 வருடங்களில் சென்னையில் ஒரு ஆடிட்டர் அலுவலகம் சென்று கொண்டு பட்டய கணக்காளர் தேர்வுக்கு படித்து வந்தேன்… அண்ணா நகர்… எழுத்தாளர் என்.ஶ்ரீராம் வீடு மிக அருகில் தான். அவர்கள் வீட்டில் தான் ஓய்வு நேரங்களில் இருப்பேன்…

அப்போதுதான் க.சீ.அண்ணாவை நேரில் சந்தித்து பேசினேன். ஒரு இரவு நேரத்தில் என் அறை தோழர் ஒருவரை பற்றியும் அவரின் பிரத்யேகமான சில குணங்களை பற்றியும் பகிர்ந்து கொண்டேன்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் ஃபோன் செய்து குமாரு, நீ சொன்ன விசயம் கதையா எழுதிட்டேன் டா. குங்குமம் புக் வாங்கி பாரு என்றார். அப்போது குண சித்தர்கள் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வந்தார்… அதில் அந்த நண்பரை பற்றி அவ்வளவு நகைச்சுவையுடன் பகடி செய்து எழுதி இருந்தார். தலைப்பு. “பொங்கி வழிபவன்” அதில் குறிப்பிட்ட நபர் இன்று அரசியல் கட்சி சார்பற்ற விவசாயிகள் கட்சியில் பிரபலமானவர். நேர்ப் பேச்சில் கூட அவ்வளவு நகைச்சுவையுடன் பேசுவார்.

அவர் இறப்பிற்கு முதல் நாள் எனக்கு கால் செய்தார். நான் கோயம்புத்தூர் வரெண்டா சந்திப்போம் என்றார். உங்கள் பதிவு பார்த்ததும் நினைவுகள்.

நன்றி

குமார் ஷண்முகம்

க.சீ.சிவக்குமார்

க.சீ.சிவக்குமார்- ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைஆலம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைந. சிவசுப்பிரமணியம்