சங்க இலக்கியம், உரை- கடிதங்கள்

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

மிக அருமையான உரை.  இயற்கை காட்சி வழி உன்னதமாக்கல் , குகை ஓவியங்கள்-> சங்க இலக்கியங்கள்->பக்தி இலக்கியம்->சீவக சிந்தாமணி+கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்த மலர்துளிகள் போல பல விசயங்களை இந்த உரை எங்களுக்கு சொல்லி தந்தது. கவிதையை வாசிப்பது எப்படி என சென்ற முறை வந்த பொழுது பூன் முகாமில் சொல்லி தந்தீர்கள், அதன் தொடர்சியாகவும்  இந்த உரை அமைந்தது.

அன்புடன்

நிர்மல்

அன்புள்ள ஜெ

என்றும் இனிக்கும் சங்க இலக்கியம் அரிய ஓர் உரை. மிகச்சிறப்பான ஒரு பார்வை. வழக்கமான போற்றிப்பாடல்கள், ஆய்வுகள் என இல்லாமல், ரசனையை முன்வைக்கும் உரை. சங்கப்பாடல்களை கவிதைகளாகவே அணுகுவதை கற்றுத்தரும் உரை. அதை ஆய்வுசெய்வதை மட்டுமே அறிந்தவர்களால் உள்ளே நுழைய முடியாது என்றாலும் கவிதைவாசகர்களுக்கு பெரிய அனுபவமாக அமையும்

கலா அமுதவன்

சங்கசித்திரங்கள் வாங்க 

சங்கசித்திரங்கள் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைரூமியை புனைதல்
அடுத்த கட்டுரைஞானத்தின் படித்துறை – கடிதம்