தியானம் -உளக்குவிதல் பயிற்சி

என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் இன்றைய சூழலில் உளம்குவிந்து செயலில் ஈடுபடுவது எப்படி என்பதாகவே உள்ளன. அதை நிகழ்த்தமுடியாமையாலேயே வாழ்வில் சோர்வும் சலிப்பும் கொண்டவர்கள் பலர். இன்றைய தொழில்நுட்பம் உளக்குவிதலுக்கு எதிரானது.நம் கவனத்தை கவர்ந்திழுக்க நம்மைவிட பலமடங்கு வல்லமைகொண்ட அறிவாளிகள், ஆய்வாளர்கள் நிறுவனமாக ஒருங்கிணைந்து பெரும்பணம் செலவிட்டு பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு திசையிலாக இழுக்க நம் கவனம் பலவாறாகச் சிதறுண்டு சிதைகிறது.

அதற்கு எதிராக நம்மை நாமே குவித்துக்கொள்ள நாம் மட்டும் முயன்றால் இயலாது. அதற்கென நிபுணர் உதவியும் பயிற்சியும் தேவை. ஆனால் அது நம் சூழலில் மிக அரிதாகவே அமைகிறது. இந்த தியானமுகாம்களின் நோக்கம் அது. எங்கோ ஓரிடத்தில் நாம் நம்மை குவித்துக்கொண்டோம் என்றால் நம்மை குவித்துக்கொள்வது எப்படி என்னும் வழியை நாமே கண்டுகொள்வோம். அந்த அறிதலே நம்முடைய மிகப்பெரிய ஆயுதம்.

அதை பயின்று அறிதல் வேண்டும் என்பது என் எண்ணம். அதற்கு நம்மை அறிந்து அருகிருந்து வழிகாட்டுபவர் தேவை. அத்தகைய பயிற்சிகள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக எங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இருபதாண்டுகளாக இத்துறையில் செயல்படும் தில்லை செந்தில் பிரபு ஒருங்கிணைக்கிறார்

அடுத்த தியானப்பயிற்சி ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழும்.

தேதிகள் செப்டெம்பர் 1,2 3 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுடையோர் தொடர்பு கொள்க  [email protected] 

முந்தைய கட்டுரைமீள்தல், அமிழ்தல்
அடுத்த கட்டுரைநாதஸ்வர இசை, கடிதங்கள்