குறளுரை

தாமஸ் ஹிடோஷி  புரூய்க்ஸ்மா தமிழ் விக்கி

தாமஸ் புரூய்க்‌ஷிமா காணொளிகள் 

அன்புள்ள ஜெ

தாமஸ் ஹிடோஷி புரூக்ஸ்ஹிமாவை நான் தமிழ் விக்கி தொடக்கவிழா வழியாகவே அறிமுகம் செய்துகொண்டேன். அதன்பிறகு உங்கள் இணையதளத்தில் அவரைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. இப்போது தமிழகத்தில் நன்கு அறியப்பட்டவராக அவர் மாறிவிட்டார். அவருடைய குறள் உரைகளைக் கேட்டு வருகிறேன். தொடர்ச்சியாக எல்லா குறளையும் மிக விரிவாக விளக்குகிறார். நவீனப்பார்வை உள்ளது. நம்மிடமிருக்கும் போலிப்பெருமிதங்கள் இல்லாமலேயே அவர் திருக்குறளின் பெருமையை விளக்குவது மனதுக்கு மிக உவப்பானதாக உள்ளது.

எம். ராஜேந்திரன்

முந்தைய கட்டுரையுவன், வாசகர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅரசூர் நாவல்கள்