தூரன் விருது- இசை நிகழ்வு
அன்புள்ள ஜெ,
தூரன் விருதுவிழா நாதஸ்வர இசையை இணையத்தில் கேட்பது வேறொரு அனுபவமாக இருந்தது. முதலில் அந்தப்பாடல்களை கேட்டேன். அதன்பிறகு நாதஸ்வர இசையைக் கேட்டேன். மீண்டுமொருமுறை பாடலைக்கேட்டேன். அதன்பின் மீண்டும் இசைவடிவத்தை. இது ஒரு பாடலை நாதஸ்வரம் எப்படி உச்சரிக்கும் என்பதை அறிவதற்கான சரியான வழியாக இருந்தது. நாதஸ்வரம் மயில்போலவும் குயில்போலவும் மாறிமாறிப் பாடியது சில இடங்களில் வயலின். சில இடங்களில் குழல். ஆனால் அது ஓங்கிஒலிக்கும்போது அதற்கு சமானமான வாத்தியமே கிடையாது.
செந்தில்
*
அன்புள்ள ஜெ,
தூரன் விழா நாதஸ்வர இசையை கேட்டேன். நாதஸ்வர இசையை பதிவுசெய்யவேண்டுமென்றால் மேடையில் மைக் வைக்கக்கூடாது. நாதஸ்வரத்தின் முகப்பு மைக்குக்கு மேலே சமானமாகத் தூக்கும்போது ஓசை சட்டென்று உச்சமடைந்து தணிக்கும்போது குறைந்துவிடும். மேடைக்கு ஐந்தடி தள்ளி இரண்டு தவில்களுக்கும் நடுவே வைக்கவேண்டும். இந்த ஒலிப்பதிவு அந்த சிக்கலுடன் உள்ளது. ஆனால் ஓசையை மிகக்குறைத்து வைத்தால் ரசிக்கமுடிகிறது. என்ன இருந்தாலும் ஒரு நாதஸ்வரத்தை பெரிய கூட்டத்துடன் அமர்ந்து கேட்பது பேரனுபவம்
அர்விந்த் ராஜ்
கீர்த்தனைகள் இணைப்பு
1) : கீர்த்தனை : கணநாதனே குணபோதனே.ராகம் : சாரங்க (https://www.youtube.
2) : கீர்த்தனை : தாயே திரி்புர சுந்தரி.ராகம் : சுத்தசாவேரி (https://www.
3) : கீர்த்தனை : அன்பே சிவம், அருளே தெய்வம். ராகம் : நளினகாந்தி (https://www.
4) : கீர்த்தனை : முருகா முருகா.ராகம் :சாவேரி (https://www.youtube.
5) : கீர்த்தனை : ஹரிஹர சுதனே ஐயப்பா.ராகம் : ஆபோகி (https://www.youtube.
6): கீர்த்தனை : எங்கே தேடுகின்றாய். ராகம் : ஹரிகாம்போதி
7) : கீர்த்தனை : எங்கு நான் செல்வேனய்யா.ராகம் : திவ்ஜாவந்தி (https://www.youtube.com/
8) : முதன்மை ராக ஆலாபனை : ராகம் ஆபேரி
9) : கீர்த்தனை : முரளிதர கோபாலா. ராகம் : மாண்ட் (https://www.youtube.
10): கீர்த்தனை : கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் : ராகம் : பிருந்தாவன சாரங்க (https://www.youtube.
11) : காவடி சிந்து: அழகு தெய்வமாக வந்து. (https://www.youtube.
12) :மங்களம்(முடிவு) : சத்தியமே வெல்லும்,தர்மமே ஓங்கிடும். (https://www.youtube.com/