மேகலா சித்ரவேல் எளிமையான நடையில் பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் யதார்த்தத்தை, உண்மை நிகழ்வுகளை, அனுபவங்களைப் பேசுவதாக இவரது படைப்புகள் அமைந்தன. அனுராதா ரமணன், ரமணி சந்திரன் வரிசையில் பெண்களை மையப்படுத்தி பல நூல்களைத் தந்த எழுத்தாளராக மேகலா சித்ரவேல் அறியப்படுகிறார். மேகலா சித்ரவேலின் மகனும் மிகப்புகழ்பெற்ற ஆளுமை.
தமிழ் விக்கி மேகலா சித்ரவேல்