‘கோட்டி’ கதையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு இனைய பத்திரிக்கை ‘சாரங்கா’வில் வந்து இருக்கிறது. சரளமான மொழியாக்கம். கதையின் ஆன்மாவை கச்சிதமாக கடத்தி இருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் குமார்.எஸ். நாகர்கோயில் வட்டாரவழக்குக்கு சமானமான ஒரு தெலுங்கு வழக்கை கையாண்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லாவிட்டாலும், கதையில் உள்ள நகைச்சுவை அங்கதம் தெலுங்கில் சிறப்பாக கொண்டு வந்து இருக்கிறார். உங்களுடைய இதர அறம் கதைகளை மொழிபெயர்த்த நண்பர் அவினேனி பாஸ்கர் உதவி இருக்கிறார்.
தமிழில் இந்த கதையை எப்பொழுது படித்தாலும்… கண்ணீர் துளிர்த்து நிக்கும். அதுவும் அந்த முடிவின் போது. தெலுங்கில் படிக்கும்போது ‘மண்ணை தின்னு மாட்டிக்கிட்ட கண்ணனை போல… கோர்ட்டில் காந்தி சிரித்துக்கொண்டு இருக்கிறார்’ என்ற வாக்கியம் உள்ளதை அப்படி பொங்கிவிட செய்தது.
மொழிபெயர்ப்பின் சுட்டி இது
கோட்டி தெலுங்கில்
மிக்க அன்புடன்,
ராஜு
THE ABYSS Paperback – வாங்க
The Abyss Kindle Edition வாங்க