ஸ்ரீராமின் பெரும்பாலான கதைகள் எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கையைச் சித்திரித்தாலும், அவை வாழ்க்கை குறித்து எழுப்புகிற கேள்விகள் ஆழமானவை. புனைவை எழுதுகிறபோது ஸ்ரீராம் தான் பிறந்து வளர்ந்த தாராபுரம் மண்ணின் இருப்பையும், தான் சார்ந்த இனக்குழு வாழ்க்கையையும், தொன்மத்தையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் வாய்மொழி வரலாற்றையும் கவனப்படுத்தியுள்ளார் என எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன் குறிப்பிடுகிறார்.
தமிழ் விக்கி என்.ஸ்ரீராம்