தியாகம், காதல், இசை

அல் கிஸா மின்னூல் வாங்க

அல் கிஸா வாங்க  

https://twitter.com/AjithanJey5925

அஜிதன் அனுப்பித்தந்த அவருடைய இரண்டாவது நாவல் ‘அல் கிஸா’ படித்து முடித்த கையோடு இப்பதிவை இடுகிறேன். இந்நாவலை நான்பெரும் வியப்புற்ற விழிகளுடனே பார்க்கிறேன். ஜெ.வின் இணைய தளத்தில் அல் கிஸாவின் முதல் அத்தியாய த்தை வாசித்தபோதே தன் எழுத்து வாழ்க்கையில் அஜிதன் பேரனுபவம் ஒன்றை நிகழ்த்தியிருப்பதாக உணர த்தலைப்பட்டேன்.நாவலை முழுவதும் வாசித்தபிறகு என் எண்ணம் உறுதிப் பட்டிருக்கிறது.

அஜ்மீர் தர்காவில் உஸ்தாத் குலாம் படே அலிகானின்’ ஹுசேன் கர்பலா போர் உயிர்த்தியாகக் கதைப் பாடல்’ நிகழ்வினூடாக ஷியா பிரிவி னரின் போராட்ட வரலாறும், நபி முகம்மது அவர்களின் அரிய வாழ்வியல் நிகழ்வுகளும் சூஃபிஇசக்கூறு களுடன் பிணைந்து உருவாகியிரு க்கின்ற கிளாசிக் படைப்பு இது. கதைப்பாடல் நிகழ்வின்அவ்வப் போதைய எதிர்வினையாகிய பெரும் கூச்சல்களுக்கிடையிலும் நான்கு விழிகள் சந்தித்துக்கொண்டு காதல் வயப்படும் சித்திரத்தை வரைந்து காட்ட அஜிதனால் இயன்றிருக்கிறது.

நாவலின் அநேக இடங்களில் அவருடைய மொழி தேர்ந்த ஒன்றாகவும் ஆங்காங்கே கவித்துவத் தருணங்களை உருவாக்கியபடியும் செல்கிறது. (அடுத்த பதிப்பில் ஒற்றுப்பிழைகளை த் தவிர்க்க வேண்டுகிறேன்..)

கோவை விஷ்ணுபுரம் விழாக் களின் இடைவேளைகளில் அஜித னை கவனித்திருக்கிறேன். முகத்தில் நிரந்தரப் புன்னகை தவழ நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார். மைத்ரி நாவல் வெளிவந்த சமயத் தில் ” நாவலாசிரியர் ஆகிவிட்டீர்கள்” என்று வாழ்த்தினேன்.

அல் கிஸா பெரிய எழுத்தாளர் களே தொடத்தயங்குகிற கான்செப்ட். அஜிதன் அனாயசமாக இதை சாதித்துள்ளார். இந்நாவல் குறித்து சற்று விரிவாக எழுதும் எண்ணம் எனக்கு இருக்கிறது. தம்பி அஜிதனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

கீரனூர் ஜாகீர்ராஜா

S Ashok’s Reviews > அல் கிஸா [Al Kisa]

அல் கிஸா- சில சொற்கள்- அஜிதன்

மொஹரம், அல் கிஸா- கடிதம்

முந்தைய கட்டுரைபூன் தினங்கள், கடிதம்
அடுத்த கட்டுரைகலைச்செல்வி