தூரன் விழா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

தூரன் பரிசளிப்பு 2023 விழாவில் கலந்துக் கொண்டேன். மிக சிறப்பான நிகழ்வாக இருந்தது. சனி மாலை 7 மணிக்கு வந்தேன் இரண்டாம் அமர்விலிருந்து கலந்துக் கொண்டேன். அனைத்து அமர்வுகளும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக கொங்கு சதாசிவம், தியோடர் பாஸ்கரன் அமர்வுகள் புதியவையாகவும் சிறப்பாகவும் இருந்தன. அதிலும் நாத‌ஸ்வர நிகழ்வு அருமை. நான் தஞ்சையில் கேட்கும் இசை விழாதான் ஆனால் நீங்கள் சொன்னது போல மைக் வைத்து அலற வைத்திருப்பார்கள். திருவிழா கொண்டாட்டம் வருமே தவிர இசையை அனுபவிக்க முடியாது. இங்கு மைக் இல்லாமல் கேட்க அதன் அசல்தன்மையுடன் இருந்தது. தியோடர் அவர்களை நான் சந்திக்க நினைத்திருந்த ஆளுமை. அவரை அருகில் அமர்ந்து பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பிகே ராஜசேகரின் தனிப் பேச்சுகள் சுவாரஸ்யமாக இருந்தன. எப்போதும் போல நாஞ்சில், தேவதேவன், தேவிபாரதி சந்திப்புகள்.

நன்றி.

கே.ஜே. அசோக்குமார்.

அன்புள்ள ஜெ

தூரன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. எல்லா விஷ்ணுபுரம் விழாக்களையும்போல முழுக்கமுழுக்க அறிவுசார்ந்த ஒரு கொண்டாட்டம். கல்வியனுபவம். ஒரு நிமிடம் கூட வீண் இல்லை. நிகழ்ச்சிகளுக்கு இடையேயான இடைவெளியில் பெரும் ஆளுமைகளைச் சந்தித்தேன். நாஞ்சில்நாடன், தேவதேவன், தேவிபாரதி, கால சுப்ரமணியம், செந்தில் ஜெகன்னாதன், தியடோர் பாஸ்கரன் என ஒவ்வொரு சந்திப்பும் மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. நன்றி

சிவக்குமார்  மா

முந்தைய கட்டுரைவெண்முரசு முழுமையாக வாங்க முடியுமா?
அடுத்த கட்டுரைகுருதியும் வெற்றியும்- கடிதம்