நீலி இதழ், ஆகஸ்ட்

அன்பு ஆசிரியருக்கு,

நீலியின் ஐந்தாவது இதழ் வெளிவந்துள்ளது. இதில் இதழியலாளர் கிருத்திகா சீனிவாசனுடனான நேர்காணல் வெளிவந்துள்ளது. உலகப் பெண் எழுத்தாளர்களான ஐசக் டினேசன், எமிலி டிக்கின்சனின் படைப்புகள் பற்றி முறையே பாலாஜி பிருத்விராஜ், அனுராதா ஆனந்த் எழுதியுள்ளனர். கன்னட எழுத்தாளரான நேமிச்சந்த்ராவின் யாதவஷேம் பற்றி V.S. செந்தில்குமார் எழுதியுள்ளார்.

கவிஞர் இசை ஒளவையார் பற்றிய கட்டுரைத்தொடரையும், கமலதேவி அம்பையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைத்தொடரையும் எழுதியுள்ளார்கள். கு..சேதுஅம்மாளின் சிறுகதைகள் குறித்து விக்னேஷ் ஹரிஹரன் எழுதியுள்ளார். சமகால பெண் எழுத்தாளர்களின் கட்டுரைத்தொடர் வரிசையில் ஜப்பானிய பெண் எழுத்தாளர் யுகீகோ மோடாயாவின் ஒரு சிறுகதையை நரேன் மொழிபெயர்த்துள்ளார். சீரியல்களில் பெண்கள் எழுதுவதன் தேவை குறித்த கட்டுரையை ஜா. தீபா எழுதியுள்ளார். ஆனந்தகுமாரசாமியின் ஸ்ரீலக்ஷ்மி கட்டுரையை தாமரைக்கண்ணன் மொழிபெயர்த்துள்ளார்.

நீலி மின்னிதழ்: ஆகஸ்ட் 2023

நன்றி,

நீலி ஆசிரியர்குழு.

முந்தைய கட்டுரைஎடைக்குறைப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைசிவ தாண்டவ மூர்த்தங்கள்