தூரனும் அறிஞர்களும் – கடிதம்

ஜெ,
இந்த வருட தூரனின் விழாவில் இசை நிகழ்வு அறிவிப்பு வந்த பின், ஏற்பாட்டாளர்கள் அந்த பாடல்களின் லிங்க்களை அனுப்பி வைத்தது நல்ல உதவி. வரிகளில் படித்தால் எளிய வார்த்தைகளில் இருந்தாலும், அந்தந்த ராகத்தில் செல்லும் போது உள் தொடும் தொலைவு அதிகம். தெய்வங்களுடன் அவர் தமிழில் பேசியிருக்கிறார்.கண்டிப்பாக இந்த நிகழ்வுக்கு வரும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என தோன்றுகிறது. வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
அன்புடன், லிங்கராஜ்

குருகு- தூரன் விருதுச் சிறப்பிதழ்

அன்புள்ள ஜெ

தூரன் விருது விழாவை ஒட்டி வெளிவந்த குருகு சிறப்பிதழ் முக்கியமான ஒரு தொகுப்பு. இணைய இதழ்கள் கைக்குக் கிடைக்கும் எழுத்துக்களை எல்லாம் கொட்டி நிரப்புவனமாக அமைந்துள்ள சூழலில் குருகு ஒவ்வொரு இதழையும் திட்டமிட்டு, உழைத்து வெளியிட்டு வருகிறது. அதிலுள்ள தத்துவக் கட்டுரைகள், பண்பாட்டு ஆய்வுக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் கூர்ந்து வாசிக்கத்தக்கவையாக உள்ளன. மு. இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர் இருவரையும் முழுமையாக அறிய உதவியான இதழ். நன்றி

ராஜன் குமார்

“விளம்பர வெளிச்சம் பட்டவர்களை மட்டுமே எழுத்தாளர்களாகவும் அறிஞர்களாகவும் தமிழகத்தில் கொண்டாடும் போக்கு உள்ளது!” மு. இளங்கோவன்
முந்தைய கட்டுரைஎழுத்தாளர்கள், இணையக்காதலர்கள்
அடுத்த கட்டுரைதனித்த நகரங்கள்: பின்நவீனத்துவ எழுத்தாளர்கள்-    பி.கே.ராஜசேகரன்