தூரன் விருது- இசை நிகழ்வு
அன்புள்ள ஜெ
இவ்வாண்டு தமிழ் விக்கி – தூரன் விருதுவிழாவின் மகுடமென அமையப்போவது இசைநிகழ்வுதான் என நினைக்கிறேன். இலக்கிய விழாக்களில் இசைக்கு இடமே இருந்ததில்லை. இருந்தாலும் சூஃபி இசை, மேற்கத்திய இசை என்றுதான் இருந்துள்ளது. தமிழகத்தின் நாதஸ்வர இசை ஒலிப்பது அபூர்வமான ஒரு தொடக்கம். அதிலும் வெறும் மங்கல இசையாக இல்லாமல் நாதஸ்வரக் கலைஞர்களை அழைத்து ஓர் இசைக்கச்சேரியாகவே நிகழ்த்துவது என்பது மிகச்சிறப்பு. தூரனுக்கு மிகப்பெரிய அஞ்சலி இதுதான். வாழ்த்துக்கள்
எம்.ஆர்.சோமசுந்தரம்
அன்புள்ள ஜெ
தூரனின் 12 கீர்த்தனைகளை நாதஸ்வரக்குழுவினர் வாசிக்கவிருக்கும் செய்தியை அறிந்தேன். மிகமிகச் சிறப்பான கீர்த்தனைகள் அவை. நீங்கள் சொல்வதுபோல அவற்றைக் கேட்டுவிட்டு வரும் ஒருவருக்கு நாதஸ்வர இசைநிகழ்வு ஓர் அரிய அனுபவமாக இருக்கும். தூரனுக்கு ஒரு விழா எடுக்கலாம். ஆனால் இந்தப்பாடல்கள் வழியாகவே அவருடைய ஆத்மாவை நாம் அறியமுடியும். வணக்கம்
ராஜ்குமார்
கீர்த்தனைகள் இணைப்பு
1) : கீர்த்தனை : கணநாதனே குணபோதனே.ராகம் : சாரங்க (https://www.youtube.
2) : கீர்த்தனை : தாயே திரி்புர சுந்தரி.ராகம் : சுத்தசாவேரி (https://www.
3) : கீர்த்தனை : அன்பே சிவம், அருளே தெய்வம். ராகம் : நளினகாந்தி (https://www.
4) : கீர்த்தனை : முருகா முருகா.ராகம் :சாவேரி (https://www.youtube.
5) : கீர்த்தனை : ஹரிஹர சுதனே ஐயப்பா.ராகம் : ஆபோகி (https://www.youtube.
6): கீர்த்தனை : எங்கே தேடுகின்றாய். ராகம் : ஹரிகாம்போதி
7) : கீர்த்தனை : எங்கு நான் செல்வேனய்யா.ராகம் : திவ்ஜாவந்தி (https://www.youtube.com/
8) : முதன்மை ராக ஆலாபனை : ராகம் ஆபேரி
9) : கீர்த்தனை : முரளிதர கோபாலா. ராகம் : மாண்ட் (https://www.youtube.
10): கீர்த்தனை : கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் : ராகம் : பிருந்தாவன சாரங்க (https://www.youtube.
11) : காவடி சிந்து: அழகு தெய்வமாக வந்து. (https://www.youtube.
12) :மங்களம்(முடிவு) : சத்தியமே வெல்லும்,தர்மமே ஓங்கிடும். (https://www.youtube.com/