மொஹரம், அல் கிஸா- கடிதம்

அன்புள்ள ஜெ 

தமிழ் ஹிந்து இதழில் கண்ட இச்செய்தி அல்கிஸாவுடன் தொடர்புடையதாக எனக்குப் பட்டது. அல் கிஸா நாவலின் அட்டைப்படத்தை இச்ச்செய்தியை வாசித்தபிறகே புரிந்துகொண்டேன்

சத்யராஜ்

தஞ்சை கிராமத்தில் 300 ஆண்டுகளாக இந்துக்களின் ‘மொஹரம்’ வழிபாடு – போட்டோ ஸ்டோரி

அன்புள்ள சத்யராஜ்,

இமாம் ஹுசெய்ன் அவர்களின் தியாகத்தை மகாத்மா காந்தி உட்பட பலரும் புகழ்ந்துரைத்துள்ளனர். அதை ஒரு மதத்தின் விழாவாக மட்டும் பார்க்கவேண்டியதில்லை. ஒரு விழுமியத்தின் நாளாகவும் பார்க்கலாம். அல் கிஸா நாவல் அந்த தருணத்தை சூஃபி மரபின் பார்வையில் அணுகுகிறது. அதை ஓர் இசையனுபவமாக முன்வைக்கிறது

ஜெ
அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.
முந்தைய கட்டுரைவான்நகர்- கடிதம்
அடுத்த கட்டுரைஎஸ்.ஜே.சிவசங்கர் ஆவணப்படங்கள்