ஆவியும் வரலாறும்

கதாநாயகி வாங்க

கதாநாயகி மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

கதாநாயகி நாவல் பேய்க் கதையாக தொடர்ந்தாலும் மெய்யப்பனின் தொந்தரவுகளை  நானும் அனுபவித்தேன்.

நள்ளிரவில் உறக்கம் தொலைப்பது, அந்த நாவலை மீண்டும் வாசிப்பது, பேய் என அஞ்சுவது, ஆனாலும் வாசிக்க அதிக ஊக்கம் கொள்வது என தொடர்ந்தாலும் ஃபேன்னி பர்னி, அந்நாவலின் கதைநாயகியான ஈவ்லினா, அக்கதைக்குள் பேசப்படும் தொல்கதாபாத்திரமான விர்ஜீனியா, அக்கதைகளை வாசிக்கும் ஹெலெனா என அவர்களுடன்  சாமுவேல் கிரிஸ்ப், ரெவெரெண்ட் வில்லர்ஸ், கர்னல் சாப்மானின் தர்க்க உரையாடல்கள் இதுவரை நான் அறியாதவை எனக்கு புதிது. அதேபோல் கோரன், துப்பன், உச்சன், கப்ரியேல் நாடார் உரையாடலில் காட்டைப் பற்றி அவர்களின் மொழியைப் பற்றி இந்த அத்தியாயத்தில் புதிதாக என்ன இருக்கும் என்ற ஆவலும் பல இடங்களில் மிகுதியாக எழுகிறது. உதாரணமாக கோரன் “”“” என்பது. பேய் பயத்துல இருந்து வேளியேற ஜேஈ ராஜப்பனின் பார்வை முக்கியது அவை 

பாவப்பட்ட வெள்ளைக்காரிஇந்த பாழடைஞ்ச பங்களாவிலே, இத்தனை ஆண்டா இருந்திட்டிருக்கான்னாஎங்கே யாரோ பெத்த புள்ளை. நமக்கும் பொட்டக்குட்டி இருக்கு…. இனி அவளை பாத்தா, அம்மா தாயி உனக்கு என்ன வேணும்? பெத்த அப்பனா நினைச்சுக்கோ. உனக்கு வேணுங்கிறத செய்யுதேன்னு சொல்லணும்என்பதுடன் 

ஸ்கிஸோஃபிர்னியா அட்டாக்கு எட்டு வருசம் முன்னாடி வந்து ஆறுமாசம் கஷ்டப்பட்டேன். அதுக்குமேலே எனக்கு பேயி பூதம் எல்லாம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சிட்டுதுஉங்களுக்கும் ஸ்கிஸோஃப்ரினியா உண்டுமா?”

கொஞ்சம் உள்ளது நல்லதாக்கும். இந்த உரையாடலில் பேய் முழுமையாக நீங்கி மனச்சிதைவு மட்டும் மேல் ஓங்கி செல்கிறது.

 ஸ்கிஸோஃபிர்னியா‌ என மனச்சிதைவு  சார்ந்த அறிவியல் பார்வை மிக முக்கியமானது. துப்பனின் வளர்ச்சி மிக அதித நெகிழ்வை தருகிறது. நாவல் நிறைவு பெற்றவுடன் புத்தகத்தை இறுகி தழுவி முத்தமிட்டேன் அது யாருக்கு என்று தெரியவில்லை

ஆசானுக்கு நன்றி.

மணிகண்டன்

திருத்தணி.

*

அன்புள்ள ஜெ

நான் வாசித்த உங்கள் நாவல்களில் கதாநாயகியே என்னை மிகவும் கவர்ந்தது. அதை ஒரே மூச்சிலே வாசித்து முடித்துவிட்டேன். ஆனால் அதற்குள் இருந்து இன்னமும்கூட வெளிவரவில்லை. அதன் அடுக்குகளை என்னால் இன்னும் ஒழுங்காக ஒரு வரலாறாக ஆக்கிக்கொள்ள முடியவில்லை. அத்தனை உள்விரிவுள்ள படைப்பு. நன்றி

ஜெயராஜன் பாண்டு

முந்தைய கட்டுரையோகம், கடிதம்
அடுத்த கட்டுரைஅ.அ.மணவாளன்