யோகம், கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம்,

முதல்நிலை யோகமுகாமில் பங்கெடுத்தேன், நன்றி! மூன்று நாட்களும் மகிழ்ச்சியாக கழிந்தது. நட்போடு கூடிய அறிவுச்சூழல் முகாம் முழுதும் இருந்தது. ஈரோட்டில், நான்கு புதிய நண்பர்களை சந்தித்து சுய அறிமுகம் செய்து, தயக்கங்கள் உடைத்து கேலியும், கிண்டலுமாய் பேசி சிரித்தபடி மலை பயணத்தை தொடங்கினோம். அந்த மலை பயணம், முகாமிற்கான நல்ல முன்னோட்டமாக இருந்தது.  

மூணு நாலு நான் இல்லைனா வீட்டுக்கோ, ஆஃபீசிக்கோ ஏதும் ஆகாதுஎல்லாமே வீடு தேடி வராதுனு, உங்களோட சொல் மூலமா தெரிஞ்சுக்கிட்டு முகாம் அறிவிப்பு எப்போ வரும்னு ஆர்வமா இருந்தேன். ஜூன்ல முதல்நிலை முகாம் இருக்கும்னு நீங்க எழுதுனத என்னோட மனைவி காதுல விழுற மாதிரி சத்தமா படிச்சு, அனுமதி வாங்கிட்டேன். நித்யவனம் வரும் வரைக்கும் ஏதும் தடை வரக்கூடாதுன்னு பதட்டமாவே இருந்தது. ஆன எல்லாமே அந்தியூர் வர சாதகமா இருந்தது. அதுக்கு அப்புறம் வழி தப்பி போய்ட கூடாதுனு அந்தியூர் மணி அண்ணா கவனமா இருந்தாங்க

யோக மரபு அறிமுகம், யோக பயிற்சி விளக்கம்னு வகுப்புகள் நல்லா நடந்தது. எப்போமே குருஜி சுத்தி கூட்டமும், கேள்வியும், சிரிப்பும் இருந்தது. எதை நினச்சும் டவுன் ஆகம, மகிழ்ச்சியா இருக்குறது தான், யோகாவலா தனக்கு நடந்த அதிசயம்னு சொன்ன குருஜி, மூணு நாளும் எங்களுக்கும் அந்த மனநிலையை குடுத்தாங்க. எங்க போனாலும், தலைவலி தைலமும், முதுகு வலி தைலமும் எடுத்துட்டு போற நான், முகாம் நடந்தப்ப அத வெளிலயே எடுக்கல

சைவ சிந்தாந்த அறிமுகம், எப்படிபட்ட கேள்வி கேக்கணும், குருவை எப்படி கண்டுபிடிக்கணும் மணி அண்ணா. நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பத்தி, ரெங்காஜி. வெண்முரசு குறித்து, நண்பர் ரமேஷ், குரு நித்யா அவர்களை பத்தி நண்பர் கோவிந்தராஜன்னு, முகாம் முழுவதும், கேள்விகளெல்லாம் சிறப்பா இருந்ததா, இல்ல நல்ல பதில் கேள்விய சிறப்பா மாத்துதான்னு சந்தேகம் வர்ற மாதிரி சிறந்த உரையாடல்கள் நடந்துகிட்டே இருந்தது

சிறந்த வாழ்வனுபவத்தை கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஆசிர்வதிக்கபட்டவனாய் உணர்கிறேன்

சக்தி ராஜ்,

பாப்பான்குளம்  

முந்தைய கட்டுரைதிருவருட்செல்வி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆவியும் வரலாறும்