கூறைநாடு நடேச பிள்ளை

நடேச பிள்ளை பல்லவி வாசிப்பதில் தனித்திறன் கொண்டவர். குறிப்பிட்ட தாளத்தில் அமைந்த பல்லவியைத் திடீரென வேறொரு தாளத்தில் வாசிப்பது இவரது வழக்கம். திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஆஸ்தான நாதஸ்வரக் கலைஞராக இருந்தார். திருவாரூர் ஆலயத்தில் நாதஸ்வரத்துக்கென எந்தெந்த நாளில் என்னென்ன ராகம், பல்லவி வாசிக்கப்பட வேண்டுமென ஒரு இசை மரபு தொன்மைக்காலம் முதல் இருந்து வந்தது. அதுபோல் ஒரு இசைத்திட்டத்தை திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்கும் பின்னர் சிதம்பரம் கோவிந்தராஜர் ஆலய ஆஸ்தான வித்வானாக ஆனபோது அங்கு ஒரு நாதஸ்வர இசை மரபைத் துவக்கிவைத்தார். இன்றுவரை இது பின்பற்றப் படுகிறது.

கூறைநாடு நடேச பிள்ளை

கூறைநாடு நடேச பிள்ளை
கூறைநாடு நடேச பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபொன்மிளிர் வழி, கடிதம்
அடுத்த கட்டுரைபெருந்தேன் நட்பு- வெளியீட்டு விழா உரை