தமிழ்விக்கி – தூரன் விருது விழா வரும் ஆகஸ்ட் 5, மற்றும் ஆகஸ்ட் 6 தேதிகளில் ஈரோட்டில் நிகழ்கிறது. இடம் ராஜ் மகால் திருமணமண்டபம், கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை சாலை, ஈரோடு.
இவ்வாண்டுக்கான விருது மு.இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கு அளிக்கப்படுகிறது. சு.தியடோர் பாஸ்கரன், பி.கே.ராஜசேகரன் ஆகியோர் விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்
தமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6
ஐந்தாம் தேதி மாலையே நிகழ்வு தொடங்கும். ஆய்வாளர்களுடனான உரையாடல் 5 மாலையில் உண்டு
இவ்விழாவில் பெரியசாமித் தூரனின் கீர்த்தனைகளை டி.பி.என் ராமநாதன் மற்றும் பாண்டமங்களம் ஜி.யுவராஜ் நாதஸ்வரத்தில் வாசிக்க தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் தவுல் இசைப்பார். அப்பாடல்களை முன்னரே அறிவித்து இணைப்பு அளித்துள்ளோம். கேட்டுவிட்டு வருபவர்கள் இசையை நன்கு ரசிக்க முடியும்