கனவும் மொழியும்-கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

குரு பூர்ணிமை இணையவழி சந்திப்பில் உங்கள் உரையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த வருட குரு பூர்ணிமை முதல் வெண்முரசு படிக்கத் தொடங்கினேன். தினமும் ஒரு பகுதியேனும் படித்துவிட வேண்டும் என முயற்சித்து நீலம் வரை வந்து இருக்கிறேன்.

முதற்கனல் வாசிப்பின் போது ஒரு கையில் gyan mudra (நன்றி: google) மறு கையில் சக்கரத்துடன்  கனவில் வராகி தேவி. கனவில் வந்த வராகி தேவியை வரைந்து வைத்து  அதனை புரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். மனமும் whiteboard வரைபடத்தைப் போலவே பிறவற்றால் சூழ்ந்து கவனம் பெறாமல் இருந்தது.

இதற்கிடையில் மனம் இயற்கையை நோக்கிய வண்ணம் இருந்தது. பறவைகள், நீர் நிலைகள் என்று என்னை மறந்து ரசித்து கொண்டிருப்பேன். ஏதோ ஒரு தருணத்தில் monarch பட்டாம்பூச்சியின் migration-ல் கவனம் சென்றது. இலையுதிர் காலத்தில் North America-வின் பல்வேறு இடங்களில் இருந்து Mexico-விற்கு அதிகபட்சம் 3000 மைல் பயணம். குளிர்காலத்தில் ஓய்வு, வசந்த காலத்தில் முதலாவது இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் என வடக்கு நோக்கிய பயணம். மீண்டும் நான்காவது தலைமுறையில் Mexico-விற்கு. கடைசி தலைமுறைக்கு முதல் தலைமுறை செய்த நீண்ட 3000 மைல் பயணம் தெரியாது. யாரும் சொல்லித்தராத உணர்வுகளால் ஆன பயணம்.

வெண்முரசு படிக்கத் தொடங்கியது முதல் உள்ளும் புறமும் இப்படி பல அனுபவங்கள். இணையவழி சந்திப்பில் நீங்கள் கூறியது ஆரம்பநிலை வாசகனான எனக்கு தர்க்கத்தால் இந்த அனுபவங்களை விவரித்து கொள்வதை விட ஆழ்மன அனுபவங்களாக உணர்வதின் முக்கியத்துவம் மகிழ்ச்சி தருகிறது. ஒரு பட்டாம்பூச்சியை போல உணர்வுகளால் ஆன பயணத்தில் ஒரு கைப்பிடி கனவுகளை அனுபவித்திட வெண்முரசை வாசிக்கத் தொடர்கிறேன்.

monarchs in Mexico

Monarch annual cycle

நன்றி

வெங்கட் நிவாஸ்

Dallas

முந்தைய கட்டுரைசோழர்களை மதிப்பிடுதல்
அடுத்த கட்டுரைசிவாஜியும் தொடுதிரையும் – கடிதம்