காசிவிஸ்வநாதன் செட்டியார் தமிழியக்க சார்பு கொண்டவர். 1937-ல், தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது, மறைமலையடிகள் எழுதிய, “இந்தி பொது மொழியா?” எனும் சிறு நூலைப் பதினைந்தாயிரம் படிகள் அச்சிட்டு நன்கொடையாக வழங்கினார். 1938-ல் ‘தமிழும் இந்தியும்’, ‘இந்தி மொழிப் பயிற்சியா?’, ‘தமிழருக்கு இந்தி வேண்டுமா?’ போன்ற சிறு சிறு வெளியீடுகளையும் பல்லாயிரம் படிகள் அச்சிட்டு விலையின்றி வழங்கினார்.
தமிழ் விக்கி மு.காசிவிஸ்வநாதன் செட்டியார்