மு.இளங்கோவன் நூல்கள்

அன்பு நிறைந்த ஜெ. அவர்களுக்கு,

பணிவார்ந்த வணக்கம்.

தமிழ் விக்கி தூரன் விருதினைத் தாங்கள் அறிவித்த நாள் முதல் என் வலைப்பதிவுக்கு வருவோர்கள் எண்ணிக்கை மிகுதியாகியுள்ளது.

அதுபோல் என் பழைய நூல்களை விரும்பி வாங்கும் தங்கள் வாசகர்களையும் காணமுடிகின்றது. என்னிடம் இப்பொழுது உள்ள நூல்களின் பட்டியலைத் தங்களுக்கு இணைத்துள்ளேன். இந்த நூல்களை வாங்குவோர்க்கு என்னிடம் உள்ள வேறு சில நூல்களையும் அன்பளிப்பாக இணைத்து அனுப்புவேன். சில நூல்கள் மிக நீண்ட நாட்களுக்கு முன் அச்சேறியதாலும்,  நான் குடியிருந்த வீட்டை ஒருமுறை வெள்ளம் சூழ்ந்து,  நூல்கள் நீரில் மூழ்கி எழுந்ததால் பழையதாக இருக்கும். சேறு படிந்த நூல்கள் , அந்த வெள்ளக் காட்சியை நினைவூட்டும்.

இக்குறைபாட்டை அன்புகூர்ந்து பொறுத்துக்கொண்டு, என் நூல்களை வாங்கி ஆதரிக்க முன்வருமாறு தங்கள் வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஈரோடு விருது விழாவிற்குக் குடும்பத்தோடு வந்து, தங்களைக் காண ஆர்வமாக உள்ளேன்.

மு.இளங்கோவன்

புதுச்சேரி.

தொடர்புக்கு :

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் [email protected]

முந்தைய கட்டுரைஇசையினூடாக அறிதல் -கடிதம்
அடுத்த கட்டுரைபாண்டமங்கலம் ஜி. யுவராஜ்