பாண்டமங்கலம் யுவராஜ் இன்றைய நாதஸ்வரக்கலைஞர்களில் முக்கியமானவர்.பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் 2003 ஆம் ஆண்டு கரூர் அரசு இசைப்பள்ளியில் திருக்கடையூர் டி.ஜி. காளிதாஸிடம் மாணவராக சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் அவரிடம் நாதஸ்வரம் பயின்றார். 2005-ஆம் ஆண்டு நாதஸ்வரக் கலைஞர் பாண்டமங்கலம் வி. மணிவாசகத்துடன் இணைந்து தனது முதல் கச்சேரியை நிகழ்த்தினார். பின் மூன்று ஆண்டுகள் அவருடன் நாதஸ்வரக் கலைஞராக இருந்தார். 2015 முதல் நாதஸ்வரக் கலைஞர் திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதனுடன் இணைந்து கச்சேரி நிகழ்த்தி வருகிறார்.
தமிழ் விக்கி பாண்டமங்கலம் ஜி. யுவராஜ்