அருட்செல்வப் பேரரசன் தமிழ் விக்கி
அன்புக்கும், மதிப்புக்கும் உரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
கோவை, சிறுவாணி வாசகர் மையத்தின் சார்பாக 2023ம் ஆண்டுக்கான நாஞ்சில் நாடன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பெறுவதில் மகிழ்ச்சியடையும் இத்தருணத்தில் முதலில் நினைவுக்கு வந்தவர் நீங்கள்தான்.
அப்பாவிடமும், அம்மாவிடமும் சொல்லி மகிழ்ச்சியடைவதைப் போல, உங்களிடம் இதைச் சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
முக்கிய தருணங்கள் அனைத்திலும் உற்சாகமளித்து, ஊக்கப்படுத்தி வந்த உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
அன்புள்ள பேரரசன்
முற்றிலும் தகுதி வாய்ந்த விருது. இன்னும் பல விருதுகள் உங்களுக்கு அமையட்டும். இன்னும் பணிகள் சிறப்புறட்டும். வாழ்த்துக்கள்.
ஜெ