மு.ஹரிகிருஷ்ணன், ஒரு விளக்கம்

ஜெ

சற்று நெருடலான விஷயம். தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மணல்வீடு ஹரிகிருஷ்ணனுக்கு சில வருடங்களாக என்னால் முடிந்த நிதியுதவியை செய்து வருகிறேன். திரு. நாஞ்சில் மற்றும் நீங்கள் சொன்ன ஒரு வரி வேண்டுகோளுக்காகவே தயங்காமல்  அவ்வப்போது அவர்  அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு பதிலாக நானும் என்னால் முடிந்த உதவியை செய்வேன். கொஞ்ச நாட்கள் முன்பு கோணங்கி தொடர்பான விவாதங்களில் இவரின் பெயரும் அடிபட்டது.

சதிஷ்குமார் என்பவர் வற்புறுத்தப்படாத வரை எனக்கு ஹரிகிருஷ்ணனின் gay side பற்றி எந்தவொரு பிரச்சினையில்லை. ஆனால் நிதி சார்ந்த கேள்விகள் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இப்பொழுது மீண்டும் அவருடைய கடிதம் வந்துள்ளது. உதவி செய்வதா என்னவென்று எனக்குப் புரியவில்லை. நேரில் சென்று விசாரிக்க என்னால் இயலாது. நிறுத்திக்கொள்ளலாம் எனவே முடிவு செய்துள்ளேன். உங்களுக்கு இதனால் நேரம் வீணாவதை நான் விரும்பவில்லை. எழுதாமலும் இருக்க முடியவில்லை.

அன்புடன்,

அருண்

*

அருண்,

இதேபோன்ற மேலுமிரு கடிதங்கள் வந்துள்ளமையால் இதை பொதுவில் பகிர்கிறேன்.

நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மு.ஹரிகிருஷ்ணனின் நாட்டார் கலைப்பயிற்சி மையம் பற்றிய செய்திகளை வெளியிட்டேன். ஒரு பொதுவான கலைத்திட்டம் என்னும் நம்பிக்கை எனக்கிருந்தது. கூடுதலாக நாஞ்சில்நாடனின் பரிந்துரையும்.

அதன்பின் அவருடைய செயல்கள், நிதிசார்ந்த நம்பகத்தன்மை குறித்த நம்பிக்கையின்மை எனக்கு ஏற்பட்டது. பல ஆண்டுகளாக அவரை நான் பரிந்துரைப்பதில்லை. என் பரிந்துரை என எவரும் அவருக்கு உதவி செய்யவேண்டாம். அவர் செயல்பாடுகள் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை இருந்தால் உதவவும்.

ஜெ

முந்தைய கட்டுரைகஞ்சிமலையாளம்
அடுத்த கட்டுரைதாத்தாவாக மாறிக் கொண்டிருக்கிறேன்- லக்ஷ்மி மணிவண்ணன்