கு.அழகிரிசாமி நூல், விலையில்லா பிரதி பெற…

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தமிழிலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளுமையும்சிறந்த சிறுகதை ஆசிரியருமான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கத்தை மனமேந்திக் கொண்டாடும்விதமாகசில செயற்திட்டங்களை கடந்தாண்டு அறிவித்திருந்தோம். அதுகுறித்த கடிதமும்  உங்கள் தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்தது. இத்திட்டத்தில்கு.அழகிரிசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி அதை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைக்கும் செயலசைவும் உள்ளடக்கம்.

இதை நிறைவேற்றும் செயலசைவின் நீட்சியாக ‘கு.அழகிரிசாமி :கதைகள்,கட்டுரைகள்மொழிபெயர்ப்புகள்கடிதங்கள்‘ எனும் புத்தகம் அச்சு நிறைவடைந்து கைவந்து சேர்ந்துள்ளது. ஆகவேமுதற்கட்டமாக 500 இளம் வாசிப்பு மனங்களுக்கு இந்நூலை விலையில்லா பிரதிகளாக அனுப்பும் செயலைத் தொடங்குகிறோம். கு.அழகிரிசாமி புத்தகத்தின் விலையில்லா பிரதியைப் பெறுவதற்கான இணையப் படிவத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

தமிழ்.விக்கி (www.tamil.wiki) கு.அழகிரிசாமி அவர்களின் இலக்கிய இடத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில், “அவருடைய சிறந்த கதைகளில் தன்னியல்பாகவே மானுடநேயம் என்று சொல்லப்படும் உளநிலையின் உச்சம் வெளிப்படுகிறது. உறவுச்சிக்கல்களின் ஆழம் தொட்டுக் காட்டப்படுகிறது. அக்கதைகள் தமிழிலக்கியத்தின் சாதனைகளாகக் கருதப்படுகின்றனஎன்றுரைக்கும் சொற்களையும் அகத்தில் நினைத்துக்கொள்கிறோம்.

புனைவிலக்கியம்மரபிலக்கியம்கடித இலக்கியம்மொழியாக்கம்நாடகம்பதிப்புப்பணிஇசைப்பணிஎன பன்முகத்திறனுடைய  ஓர் தமிழெழுத்தாளராக தலைசிறந்த படைப்புகளைத் தந்து இம்மொழியின் இலக்கியச் சாத்தியங்களைப் பெருமளவு உயர்த்தியவர் கு.அழகிரிசாமி. அவரை மனமேந்திக் கொண்டாடி நன்றிசெலுத்தும் பொருட்டு துவங்கப்பட்டதே இச்செயற்திட்டம். மனித வாழ்வின் உயிரோட்டங்களை இலக்கியத்தில் தடம்பதித்த மூத்த ஆசிரியர் கு.அழகிரிசாமியை இக்கணம் பணிந்து வணங்குகிறோம்.

விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு:

https://docs.google.com/forms/d/1qL919q8u52tI-ENVXkqbE3fFYtZ0ALL66ppJcONeRTM/edit

நன்று நிகழ்க!

~

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

+91 9843870059 ,  www.thannaram.in

முந்தைய கட்டுரைமுகில்நகர், பதிவு
அடுத்த கட்டுரைகவிஞன் கடிதங்கள்