சுந்தர ராமசாமி, ஞானி -கடிதங்கள்

சு.ரா நினைவின் நதியில் வாங்க

அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,

இனிய காலை வணக்கம்.

உங்களுடைய ஒரு மேன்மையான பலரது வாசகர் மனதை தனது சிறந்த ஆக்கங்கலான ஜே ஜே சில குறிப்புகள், ஒரு புளிய மரத்தின் கதை, சிறுகதைகள் தொகுப்பு போன்றவற்றை சிருஷ்டித்த சுந்தர ராமசாமி பற்றி – அவரின் விழைவுகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், அணுக்கமான பல படைப்பாளிகள், விலகி இருக்க விழைந்த சில படைப்பாளிகள், உறவுகள் பற்றிய, ஆன்மீக சிந்தனைகள் பற்றி, சமூகத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள்….உங்களுக்கும் அவருக்குமான பல உவப்பான நிகழ்வுகள் கொண்ட “சுந்தர ராமசாமி நினைவின் நதியில்” என்ற பனுவலை வாசித்து பெற்ற அனுபவம் எனக்கு தனித்துவமான ஆழ்ந்த இரு படைப்பாளிகளின் நட்பை, இருவருக்கும் இருந்த அன்பை, முரண்பாட்டை ஒளி மறைவின்றி படிக்கும் என்னைப்போன்ற வாசகனுக்கு வழங்கிய சிறந்த ஆக்கமாக எண்ணுகிறேன்.

சு ராவை கவர்ந்த ஜே கே பற்றிய எனது அனுபவங்கள் – அவரின் முக்கிய சிந்தனையாக நான் எண்ணுவது ….கடவுளை ஒரு அமைப்பின் மூலம் அணுகுவது சரியான வழியில்லை என்று தனது சொற்பொழிவுகளில் கூறியவர். மேலும் நாம் அறிந்தவற்றை வைத்து அறிய முடியாத ஒன்றை அணுக வாழ்வு முழுக்க எத்தனிப்பதும் சரியில்லை என்று கூறிய ஒரே ஒரு சிந்தனையாளர் என்று எனக்கு தோன்றுகிறது.

உங்களது படைப்புகளை வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்குமே கிடைக்கும் அரிய அனுபவம், கற்பிதம் – பல ஆளுமைகள் பற்றி, அவர்களின் படைப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் உங்கள் பல படைப்புகள் எனக்கு உதவி இருக்கின்றன. உங்களின் மூலமே நான் பல எழுத்தாளர்களை கண்டடைந்தேன். சமீபத்தில் பி.கே. பாலகிருஷ்ணனின் “இனி நான் உறங்கட்டும்” படித்து, அதீத வியப்பில் ஆழ்ந்தேன்.

இப்போது உங்களின் “பிரதமன்” என்ற சிறுகதைகள் தொகுப்பை வாசிக்க தொடங்கியுள்ளேன்.

உங்களின் பல வரவிருக்கும் சிறந்த ஆக்கங்களை எதிர்நோக்கியிருக்கும் எளிய வாசகன் …

அன்புடன்

பழனியப்பன் முத்துக்குமார்

ஞானி நூல் வாங்க

ஞானி மின்னூல் வாங்க

ஞானி – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

ஞானி நூலை மிக விரும்பிப் படித்தேன். வழக்கம்போல ஒரு வரண்ட வாழ்க்கைக்குறிப்பாக அது இருக்குமென நினைத்தேன்.ஞானியை எனக்குத் தெரியும் என்பதனால்தான் வாங்கினேன். ஆனால் வாசிக்க ஆரம்பித்தபோது அற்புதமான நாவல் போல

உள்ளே கொண்டுசென்றது. வைக்கவே முடியாத வாசிப்பனுபவம். ஞானியின் நக்கல் நையாண்டி எல்லமே அதிலிருந்தன. அந்தக் காலகட்டச் சிந்தனையை ஒட்டுமொத்தமாகவே அந்நாவல் காட்டிவிட்டது. மன்னிக்கவும் அதை ஒரு நாவலாகவே என் மனசு பதிவுசெய்துள்ளது.

அர்விந்த் குமார்

காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)

ஞானி,விவாதங்கள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைசிறுகதையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?
அடுத்த கட்டுரைச.பவானந்தம் பிள்ளை