குருகு ஜூலை இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு,

குருகு ஐந்தாவது இதழில் விசிஷ்டாத்வைதியும், ஸ்ரீ பாஷ்யம் மற்றும் வைணவ தத்துவ நூல்களுக்கு எளிய தமிழில் உரை எழுதியவருமான  சடகோப  முத்து ஸ்ரீநிவாசன் நேர்காணல் வெளியாகின்றது. தாமரைக்கண்ணன், எழுதும் ஆடல் தொடர் திருஞானசம்பந்தரின் வரலாற்றை நோக்கிச் செல்கிறது.   நகரத்தார் பயன்படுத்தும் மரபான  அணிகலன்கள் குறித்து  ராமநாதன் விரிவான கட்டுரை எழுதியுள்ளார்.  நாராயண குருவின் தெய்வதசகத்தில் இம்முறை உணவோடு உயிர் கொள்ளும் உறவையும் அவற்றை பிரம்மத்திடம் இறைஞ்சும் பாடல் விளக்கப்பட்டுள்ளது. அறிவியல் தத்துவம் தொடர் தனது அடுத்தடுத்த தளங்களுக்கு செல்கிறது, விளக்கங்களையும் விதிகளையும் விவரிக்கின்றது. ராஜஸ்தான் ஓவியம் தொடர் கவித்துவமான காட்சிப்படுத்தல்களை வெவ்வேறு பள்ளிகளின் பாணியுடன் ஒப்பிட்டு காட்டுகிறது. இம்முறையும் தத்துவம், அறிவியல், கலை,  ஆகியவற்றை உள்ளடக்கிய இதழாக குருகு வந்துள்ளது.

kurugu.in

அன்புடன்

குருகு

முந்தைய கட்டுரைவெண்முரசு விவாதங்களும் கட்டுரைகளும்
அடுத்த கட்டுரைதூரன் விருது 2023, கடிதங்கள்