அன்புள்ள ஜெ,
நேற்று டைம் வாரப் பத்திரிகையில் இந்தக் கட்டுரையைப் படித்தேன் http://www.time.com/time/ magazine/article/0,9171, 2084441,00.html . பெரிய பன்னாட்டுநிறுவனங்களின் தலைவராக அமெரிக்கர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள்தான் அதிகமாக நியமிக்கப்படுகிறார் கள் என்பது பற்றிய செய்திக் குறிப்புடன் அது ஏன் என்று ஆராயவும் செய்கிறது. வழக்கம் போல இந்தியாவின் பன்முகத் தன்மை, கடுமையான கல்விப் போட்டி, இந்திய சிகப்பு நாடா அதிகாரத்துவம் அளிக்கும் விசேஷப் பயிற்சி போன்றவை காரணமாக சுட்டிக் காட்டப்பட்டன. கடைசியில் இந்தியர்களின் நெறிமுறைகள் எப்படி அவர்கள் வெற்றி பெறுவதற்குத் துணை யாக இருக்கிறது என்பது பற்றியும் ஆராய்ந்தது வியப்பாக இருந்தது. நீங்களே மேலும் படிங்கள்..
சிவா