வெண்முரசு, நிகழ்வுகள் காணொளிகள்

அன்புள்ள ஜெ

வெண்முரசு நாள் என்னும் அறிவிப்பை தொடர்ந்து மீண்டும் 2014 முதல் ஏழாண்டுகள் வெண்முரசே வாழ்க்கையாக இருந்த நாட்கள் நினைவிலெழுகின்றன. கண்ணீர்த்துளி வருமளவுக்கு ஒரு பெரிய தனிமையும் துக்கமும் ஏற்படுகிறது. அதைப்போல எல்லா அல்லல்களையும் மறந்து ஒரு பெரிய கனவில் நான் வாழ்ந்திருந்ததே இல்லை. என்னால் அப்படி வாழமுடியுமென நினைத்ததுகூட இல்லை. ஆனால் வாழ்ந்திருக்கிறேன்.

அந்த நாளில் இருபது நிமிடங்களில் வெண்முரசு வாசித்து முடிந்துவிடும். அதன்பிறகு மனம் அடங்காமல் வெண்முரசு பற்றிய மற்ற குறிப்புகளையும் கடிதங்களையும் வாசித்துக்கொண்டிருப்பேன். வெண்முரசு இன்னும் வாசித்துத் தீரவில்லை. ஆனாலும் வாசித்து நிறைந்துவிட்டேன் என்ற நினைப்பும் உண்டு. அப்போதெல்லாம் மொத்த நாவலையும் ஒன்றாக நினைத்துக்கொள்ள விரும்புவேன்.

வெண்முரசு வெளியீட்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதன் நிறைவுவிழாவும் அதேபோல நடந்திருக்கவேண்டும். கொரோனா காரணமாக அது நடவாமல் போயிற்று என நினைக்கிறேன். இந்த வெண்முரசுக் கொண்டாட்டங்கள் அதற்கு கொஞ்சம் ஈடு செய்கின்றன.

அருண்மொழி அவர்களின் உரையும் சரி, ராஜகோபாலன் உட்பட வேறுவேறு தனி கட்டுரைகளும் உரைகளும் சரி, வெண்முரசு நாவல்வரிசையை ஒட்டுமொத்தமாக உள்வாங்கிக்கொள்ள பெரிதும் உதவுபவை. இப்போதுகூட அவற்றையெல்லாம் வாசித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும்தான் இருக்கிறேன்

ஆர்.சபிதா

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைஇசையும் ஓவியமும் இலக்கியத்திற்கு எதற்காக?
அடுத்த கட்டுரைசெயற்கை நுண்ணறிவு- கடிதம்