அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் . தாங்களும் எழுத்தாளர் அருண்மொழி நங்கை அவர்களும் இந்த வருடமும் அமெரிக்கப் பயணத்திற்கு அக்டோபர் மாதத்தில் நாட்கள் ஒதுக்கி வர சம்மதத்தில் மகிழ்கிறோம். சென்ற வருடம்போலவே இவ்வருடமும் வட கரோலினா மாநிலத்தில் உள்ள பூன் நகரில் காவிய முகாம் தங்களின் வழி நடத்தலில் நடத்த இருக்கிறோம். இந்தப் பயணத்தில் கனடாவையும் சேர்ப்பதால், வட அமெரிக்க கண்டத்தை சுற்றும் பயணம் எனச் சொல்வதே சரி, தாங்கள் பயணிக்கவிருக்கும் இடங்களையும், கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்வுகளையும் அந்தந்த நகர்களில் வசிக்கும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
அக்டோபர் 1 – 5 ஆஸ்டின், டெக்ஸாஸ்
அக்டோபர் 6 – 7 பூன் முகாம்
அக்டோபர் 8 – 9 ராலே, வட கரோலினா
அக்டோபர் 10 – 12 மையாமி, டாம்பா, ஃப்ளோரிடா
அக்டோபர் 14 – 18 போர்ட்லாண்ட், சியாட்டல்
அக்டோபர் 19 – 20 வான்கூவர், கனடா
அக்டோபர் 21 – 24 டொரோண்டோ, கனடா
அக்டோபர் 25 – 28 நியூ யார்க் / நியூ ஜெர்ஸி
சென்ற வருடம் தாங்கள் செல்ல முடியாத நகரங்களை, நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி புதிய இடங்களும் / மாநிலங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தேதிகளும் இடங்களும் ஒருங்கமைப்பாளர்களின் நேரத்திற்கும் வசதிக்கும் தக்கபடி திட்டமிடப்பட்டுள்ளன. மேற்கொண்டு எதுவும் மாற்றங்கள் செய்யும் சூழலில் இல்லை.
பூன் முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும். பூன் முகாம், அக்டோபர் 6 மற்றும் 7 நடக்கிறது என்றாலும், ஐந்தாம் தேதி மாலையே தங்குமிடத்திற்கு வரவேண்டியிருக்கும். எட்டாம் தேதி, காலை உணவு முடித்தவுடன் கிளம்புவது போல் இருக்கும். விருப்பம் உள்ள நண்பர்கள் நான்கு நாட்கள் ஒதுக்கவேண்டும் என்று கணக்கில் கொள்ளவும்.. அமெரிக்காவில் சில நிறுவனங்கள், இதை, பயிற்சிக்குச் செல்லும் வேலை நாளாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு, எழுபது இடங்களே உள்ளதால், படிவத்தில் தாங்கள் கொடுக்கும் விபரங்களை வைத்து, பூன் காவிய முகாமின் ஒருங்கமைப்பாளர்கள் ஆலோசித்து முடிவு செய்யும் கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களின் புரிதலின் எல்லைக்குள் நின்று முடிவெடுப்பதை, விண்ணப்பிக்கும் நண்பர்கள் ஆதரிக்க கேட்டுக்கொள்கிறோம்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்