கலைமாமணி முத்து சந்திரன், கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம்,

நலம் தானே. கடந்த 2020ஆம் ஆண்டு நோய் தோற்று காலத்தில் போது ஊரடங்கில் பசியோடிருந்த தோல்ப்பாவை கூத்து நடத்தும் குடும்பங்களுக்கு இருமுறை உணவு பொருட்கள் வழங்கியபின் எங்கள் கிளப் டென் அறக்கட்டளையின் நிர்வாகி தொடர்ந்து உணவு பொருட்கள் நம்மால் வழங்க இயலாது வேறு ஏதாவது யோசிப்போம் என்றார்.

பாரம்பரிய கலையை மீட்டெடுப்போம் என இணையம் மூலம் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தோம். அப்போது நான் எழுதிய கடிதம்  https://www.jeyamohan.in/137701/ உங்கள் தளத்தில் வெளியானது உங்களின் வாசக நண்பர்கள் உலகம் முழுவதுமிருந்து கட்டணம் செலுத்தி கலைமாமணி முத்துசந்திரன் குழுவினர் நடத்திய தோல்பாவை கூத்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

அதன் பின் பல ஊர்களிலிருந்து அவருக்கு நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் கிடைத்தது.அப்போதே அமெரிக்க தமிழ் சங்கத்திலிருந்து  ஒருவர் என்னை அழைத்து தோல் பாவை கூத்து கலைஞர்களுக்கு உதவ விரும்புவதாக கூறினார்.

வரும் ஜூன் 30,ஜூலை 1,2-2023 நாட்களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மண்ணும்,மரபும் எனும் நிகழ்ச்சியை அங்குள்ள தமிழ் சங்கங்கள் நடத்துகிறது.இதில் தமிழ் பாரம்பரிய கலைநிகழ்சிகள் நடக்கவுள்ளது.

இந்நிகழ்வில் தோல் பாவை கூத்து நடத்துவதற்காக முத்துசந்திரன் இம்மாதம் அமெரிக்க செல்கிறார். மேலும் அங்கு எட்டு நிகழ்சிகள் ஏற்பாடாகியுள்ளதாக சொன்னார் அவருக்கு வாழ்த்துக்கள்.

தோல் பாவை கூத்து குறித்து ஆ கா பெருமாள் அவர்கள் விரிவாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுளார். அவர்களின் இருப்பிடத்திற்கும்,சாதி சான்றதிழுக்கும் பெரும் முயற்சி செய்து பெற்று கொடுத்தவர் அவரே.

தோல் பாவை கூத்து இணையவழி நிகழ்வின் அறிவிப்பை உங்கள் தளத்தில் வெளியிட்டதால் உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது.அது இன்று  இங்கிருந்து அமெரிக்கா வரை செல்லும் வாய்ப்பையும் பெற்று தந்துள்ளது.

இன்று கிளப் டென் நிர்வாகி என்னிடம் பேசும்போது “பாரம்பரிய கலையை மீட்டெடுப்போம் என்றோம் அது நிறைவேறுகிறது”என்றார்.

ஆ.கா. பெருமாள் ஐயாவிற்கும்,உங்களுக்கும்,உங்கள் வாசக நண்பர்களுக்கும் அப்போது பெரு முயற்சி செய்து இணைய வழி நிகழ்ச்சி நடத்திய கிளப் டென் நிர்வாகி மற்றும் குழுவினருக்கும் உதவியாக இருந்த பாண்டி Big FM க்கும் நன்றி சொல்கிறேன்.

ஷாகுல் ஹமீது.

முந்தைய கட்டுரைஇளம் படைப்பாளிகள் அரங்கம்: உரைகள்
அடுத்த கட்டுரைசார்ல்ஸ் மீட்