அர்ஜுனனும் முதலையும்- நிர்மல்

காண்டீபம் மின்னூல் வாங்க

காண்டீபம் வாங்க

நம் மரபில் உலகியல் விழைவுகளின் தெய்வமான மன்மதனும், அவன் மனைவியும் ரசனையின் தெய்வமுமான ரதியின் வாகனமாக முதலை உண்டு.  முதலை என்பது உலகியல் விழைவும், ரசனையும் ஊர்ந்து செல்லும் ஒரு இடம்.  கஜேந்திர மோட்சம், ஆதிசங்கரர் கதை ஆகியவற்றிலும் முதலை வரும். உலகியல் விழைவின் ரசனை முதலைப் பிடியாய் நம்மையும் பிடித்துள்ளதல்லவா? விழைவினை  எரித்து அழிக்கவா முடியும்?  அப்படியே ஆனாலும் பின்னர் ரசனை மன்றாடி விழைவினை புத்துயிர் கொள்ள செய்யக் கூடிய சக்தியாகும்.

கதைப்படி கௌரவ இளவரசன் சுஜயனுடன் கங்கை ஆற்றுக்கு மாலினி தேவியும், சுபகையும் செல்கையில் முட்டையிட்டு காத்திருக்கும் பெண் முதலையை சுஜயனுக்கு காட்டுகின்றனர். அந்த சூழலில் ஐந்து முதலைகளின் கதையை சொல்கின்றார். பாலமுது ஊட்டி குழந்தைக்கு கதை சொல்லப்படுகின்றது.

அருந்தவத்தோர் வேள்வி மேடையில் அளிக்கும் அவி ஒன்றே விரும்பத்தக்கது என்று வாழ வேண்டிய தேவருலகை சேர்ந்து ஐந்து தேவக்கன்னியர் இருந்தனர். வர்கை. சௌரஃபேயி, சமீசி, ஃபுல்புதை, லதை என ஐவர். இந்திரனின் பொற்கழல் மணி உதிர்ந்து உதிர தேவகன்னியர் யாருமறியால் எடுத்து உரிமைக் கொள்கிறனர். பொன் தரும் மயக்கத்தினை ஐந்துமுகத்தழல் இவ்வாறு சொல்கின்றது. இனிமையான வரிகள்.வாசிக்கையில் கையில் அந்த அழகு மணி நம்மிடம் இருப்பது போல இருக்கின்றது.

செந்தாமரை மேல் ஒரு பொன்வண்டு அமர்ந்ததுபோல்”, “தளிரிதழில் நீர்மணி நின்றதுபோல்”,”செவ்வானில் எழுந்தது இளங்கதிர்”, “இளஞ்சேற்றில் எழும் முதல் தளிர்”,“தீரா பெருங்காமம் கொண்ட இதழ் ஒன்றின் முத்தம்போல் சிலிர்க்க வைக்கிறதடி இது”,“பொன் என்பது ஒருபோதும் வாடாத வண்ண மலரல்லவா?” 

பொன் இன்றைக்கும் அப்படி மயக்கம் தரும் பொருளே. வர்க்கையின் கனவில் அன்று ஒரு பொன்நாகம் வருகின்றது. அவள் பொன்னை விட்டு விட விரும்பவில்லை. இன்னமும் இறுக்கி பிடிக்கின்றாள்.

தேவருலகின் ஒரு பெண் கொண்ட விழைவு , நிகர் நிலையாய் இருந்த தேவருலகை சாய்க்கின்றது, தேவேந்திரன் ஐந்து கன்னியரையும்  “இக்கணமே இங்கிருந்து நீ உதிர்க! உன் விழைவு எங்கு உன்னை இட்டுச்செல்கிறதோ அங்கு சென்று விழுக!” என்றான்நம் மரபில் ஓவ்வொரு சாபமும், ஒரு விமோசன வழியை காட்டியே செல்லும்.

தேவேந்திரன் கன்னியரே, விழைவு என்பது இன்னும் இன்னும் என்று மீறும் எழுச்சியையும் போதும் போதும் என்று தள்ளும் தவிப்பையும் தன் இரு முனைகளாக கொண்டுள்ளது. அத்தவிப்பு மறைந்த மறுகணமே நீ எங்கிருந்தாலும் அங்கிருந்து எழுந்து மீண்டும் இங்கு வருவாய். இங்கிருந்து சென்றபோது இருந்த கணத்தின் மறுகணத்தை அடைவாய். ஆம், அவ்வாறே ஆகுக!”  என வழிக் காட்டினான்.

இன்னும், இன்னும் என மீறும் எழுச்சிக்கு பின் போதும், போதும் என்ற தவிப்பு உண்டென விழைவை ஐந்துமுகத்தழல் சொல்லுகின்றது.

அங்கிருந்து அவர்கள் குபேரனின் புழுதியும் பொன்னால் ஆன அளகாபுரியில் வந்து சேர்ந்தனர். பொன்னில் திளைத்தனர். திளைப்பின் முடிவில் பொன் என்பது ஓர் வெறும் உலோகம். அதை எப்படி மறந்தோம்?” என்றாள். “உலோகம் தன்னுள் தானே அமைதி கொண்டது. பிறிதனைத்தையும் தன் பரப்பில் எதிரொளித்து மறுதலித்து உள்ளே தனித்து குளிர்ந்திருப்பது. எத்தனை ஓசையற்றவை இவ்வுலோகங்கள்!”  என அறிகின்றார்கள். இப்பொன்வெளியில் சிறையிடப்பட்டிருக்கிறோமடிஎன அறிகின்றார்கள். சிறை பொன்னால் ஆனாலும் சிறைதான். புழுதியே பொன்னாலும் சிறை மாறுவதில்லை.பொன்னால் நிறையாத விழைவால் அளகாபுரியின் சமநிலை குலைகின்றது.

அவர்கள் சிறை என உணர்ந்ததும், பொன்னுலக வேந்தன் குபேரன் அதை அறிகின்றான். எங்கு வாழ்கிறீர்களோ அங்குள்ளவற்றால் நிறைவுறும் விழைவுகளே உண்மையானவை. இங்கு நீங்கள் கொண்டுள்ள விழைவு பொன்னால் நிரப்பப்படாதது என்பதனால் பொருந்தா இருப்பு கொண்டீர்…” என்றான். “இப்போதே என்னுலகிலிருந்து விலகுங்கள்!”  என வெளியேற சொல்கின்றான். உங்கள் உளம் விரும்புவது பிறிதொன்று. இவ்விழைவுடன் நீங்கள் எங்கு எழ வேண்டுமோ அங்கு செல்க!” என சொல்லி குபேரன் விலகுகின்றான். ஐந்து கன்னியரும் பூமிக்கு சென்று பாரத வர்ஷத்தின் தெற்கே மகாநதிக் கரையில் இருந்த தேவாரண்யம் என்னும் பசும் பெருங்காட்டில் வந்து சேருகின்றனர்.

அக்காடே பூர்ணர் என்னும் முனிவரின் தவத்தில் நிலவொளி போல குளிர் ஓளிகின்றது. அதை கண்ட தேவகன்னியர் களியாட விளைகின்றனர். முனிவரின் தவத்தினை விளையாட்டாக களைக்கின்றனர்.

தேவகன்னியரின் களியாட்டால் தன் தவம் கலைத்தமையால் நிலையழிந்த பூரணர்  “நீங்கள் அறிந்து இதை நிகழ்த்தவில்லை. என் முழுமைக்கு முன் வந்த தடைக்கற்கள் நீங்கள். ஆயினும் நீங்கள் இழைத்த பிழைக்கு ஈடு செய்தே ஆகவேண்டும். அகல்க! ஐவரும் ஐந்து முதலைகளென மாறி இங்குள ஐந்து தடாகங்களில் வாழுங்கள். காலம் உங்களை காற்று பாறையை என கடந்து செல்லட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!”   என சாபமிட்டு உடல் துறந்து மறுபிறப்பு அடைந்து தன் தவத்தினை தொடர்ந்தார்.

அகத்தியத்தில் வர்கை இறங்கினாள் சௌஃபத்ரத்தில் சௌரஃபேயியும் பௌலோமத்தில் சமீசியும் காரண்டமத்தில் ஃபுல்புதையும் சுப்ரசன்னத்தில் லதையும் முதலைகள் ஆனார்கள்.

தேவலோகம் நிறைவை தரவில்லை, பொன்னுலகம் நிறைவை தரவில்லை, பூவுலகின் மானுடர் நிறைவை தரவில்லை. தீராத விழைவுகளை கொண்டவர்கள் மன்மதன்,ரதி ஊரும் முதலைகளாக  நின்றனர்.

தேவருலகில் இருந்து பொன்னுலகம் வீழ்ந்து பொன்னுலகில் இருந்து மானுடராய் மண்ணுலகம் வீழ்ந்து, மண்ணுலகில் இருந்து மனிதரை தின்னும் முதலையாய் வீழ்ந்தனர். விழைவினை விடாமல் பற்றி சென்றனர்.

எனது வழி காற்றில் மிதக்கும் அம்புகளுக்குரியது. அம்புகளும் பறவைகளே”  என வாழும் அர்ஜுனன் அவ்வழி வருகின்றான். வர்ணபக்‌ஷன் என்னும் பறவை அவனை சுனை குறித்து எச்சரிக்கின்றது. அர்ஜுனன் தைரியம் கண்டு வியந்து அவன் வெல்வான் என சொல்லி அவனுக்கு சுனைகளை நோக்கி

பாதைக்காட்டுகின்றது. ஓவ்வொரு சுனையிலும் அர்ஜுனனின் விழைவினை அறிந்து அந்த வடிவம் கொள்கின்றனர்.  அவ்வடிவில் இருந்து கொண்டு முதலை வடிவ தேவகன்னியர் அவனை பணிய வைக்க முயற்சி எடுக்கின்றனர்.  அதில் பணிய மறுக்கும் அர்ஜுனனை பின்பு அவனை கொல்ல மோதுகின்றனர்.  அதில் அர்ஜுனன் வென்றதும் தன்னூரு கொண்டு தேவலோகம் தேவகன்னியராக செல்கின்றார்கள்.

பிராணன், அனைத்து உடலின்,மனதின் அனைத்து நிலைகளையும் உயிர்ப்பிக்கும்  சக்தி. பிராணன் உடலை இயக்கவும் மனதை சிந்திக்கவும் உதவுகிறது. பிராணன் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலமும், ஹத யோகாவின் பயிற்சிகள் மூலம் அதன் ஓட்டத்தை செம்மை செய்தல் மூலமும் முறையாக கையாளுதல் மூலமும்-நாம் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தலாம், விரிந்த உள் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளலாம், மேலும் நனவு வாழ்க்கையின் உயர் நிலைகளுக்கான கதவைத் திறக்கலாம்.

ஓவ்வொரு சுனையின் இயல்பாகவும் ஓவ்வொரு பிராணன் சொல்லப்படுகின்றது, ஓவ்வொரு பிராணனையும் அர்ஜுனன் வெற்றிகரமாக கையாண்டு முன்னோக்கி செல்கின்றான்.  ஓவ்வொரு பிராணணின் வழியாகவும் அவன் விழைவின் மீதான முதலைப்பிடிகளை உதறுகின்றான்.

ஓவ்வொரு விழைவும் தாயின் பரிவுடன் ஆனால் வாளின் கூருடன் வருகின்றது, வார்த்தைகளில் சித்ராங்கதையாய், திரௌபதியாய், உலூபியாய் பேசுகின்றது, அன்பாக கொஞ்சுகின்றது. அர்ஜுனன் கடக்க தடுமாறும் இடம், அவன் தடுமாற்றத்தில் அவனை உண்ண எழுகின்றது, ஆனால் தன் உயிர் விசையால் வெல்லுகின்றான்.

சுனையின் பெயர் சுனையின் இயல்பு

(ஐந்து பிராணங்களின் இயல்பாக சொல்லப்படுகின்றது)

தேவ கன்னியின் 

பெயர்

அர்ஜுனன் முதலையை வெல்ல கொள்ளும் ஆயுதம்
அகஸ்தியம் பிராணம் வர்கை இந்த உயிர் சக்தி

உட்கொள்ளல், உத்வேகம், உந்துதல், முன்னோக்கி நகர்ந்து செல்லும் தன்மை ஆகியவற்றினை  நிர்வகிக்கிறது

சௌஃபத்ரம் அபானம் சௌரஃபேயி இந்த உயிர் சக்தி

நீக்குதல், கீழ் நோக்கிய மற்றும் வெளிப்புறம் நோக்கிய நகருதலை நிர்வகிக்கிறது

பௌலோமம் வியானம் சமீசி இந்த உயிர் சக்தி

அனைத்து நிலைகளிலும் சுழற்சியை நிர்வகிக்கிறது, விரிந்து , பரவும் இயல்பை நிர்வகிக்கின்றது

காரண்டமம் சமானம் ஃபுல்புதை இந்த உயிர் சக்தி கிரகித்தல், ஒருங்கிணைத்தல் , தீர அலசுதல், தொகுத்தல் ஆகியவற்றினை நிர்வகிக்கின்றது.
சுப்ரசன்னம் உத்தானம்

 

லதை இந்த உயிர் சக்தி வளர்ச்சி, பேச்சு, வெளிப்பாடு, ஏற்றம்  ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

அர்ஜுனன் தன் மேல் கொள்ளும் வெற்றியானது, தேவ கன்னியருக்கு முன்னுதாரனமாக இருந்தது, விழைவின் மீதான தங்கள் கேள்விகளையும், தங்கள் முதலை ரூபத்தினையும் உதிர்த்து சுய ரூபம் கொண்டு தங்களிடம் திரும்ப உதவுகின்றது. ஓவ்வொரு கன்னியரும் அர்ஜுனனிடம்  தங்கள் வினா உதிர்ந்தது என சொல்வது வாசிக்கையில் உள எழுச்சியை கொடுத்தது. அர்ஜுனன் செயல் அவர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாக இருந்தது.

இக்கதை நடக்கையில் சுபத்திரா திருமணம் முடிந்து இருக்கவில்லை, லதை அர்ஜுனனிடம் ““மீள்க! நீ வென்று வர இன்னும் ஒரு களம் உள்ளது.” என சொல்லி அனுப்புவாள். ஐந்து முகம் கொண்டு தழலாய் எரியும் விழைவினை நோக்கிய அர்ஜுனன் பயணத்தினை இக்கதை சொன்னது.

விழைவை தழல் என சொல்லும் வரிகள் ஐந்துமுகத்தழலில் வரும். பச்சை மரத்திலும் தழல் உண்டு, ஆனால் அந்த தழழை வெளிக் கொண்டு வந்து சூடினால் அது மரத்தினையே எரித்து விடும். விழைவுக்கு அத்தனை ஆற்றலுண்டு.  கதையின் வரிகளை பாருங்கள்.

வேந்தே, விழைவுகளுக்கு எவரும் பொறுப்பல்லஎன்றாள் வர்கை. “ஆம். பொருள் ஒவ்வொன்றிலும் அனல் உறைகிறது. ஆனால் ஒவ்வொன்றும் தன் அமைப்பால் மட்டுமே இருப்பு கொள்கின்றது. உள்ளிருக்கும் அனல் எழுந்தால் அவ்வமைப்பையே அது உண்டு சாம்பலாக்கும்.”

தன்னுள் இருக்கும் நெருப்பை சூடும் தகுதி பசுமரத்திற்கில்லைஎன்றான் இந்திரன்.

நிர்மல்

காண்டீபனை கைது செய்த காதலி- நிர்மல்
வில்லின் கதை
சித்ரரதன் கதை- நிர்மல்

முதல் நடம் -நிர்மல்

முந்தைய கட்டுரைசைவமும் வைணவமும் இந்து மதமா?
அடுத்த கட்டுரைகாவு- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்