மனிதரைப் பாடமாட்டேன் என்ற கண்ணதாசனின் பாட்டிற்கு, மனிதரைப் பாடுவேன் என்று சௌந்தரா கைலாசம் பாடிய எதிர்க்கவிதை பிரபலமானது. தமிழில் புதுக்கவிதை இயக்கம் உருவாகி மரபுக்கவிதை வழக்கொழிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் மரபுக்கவிதையை பொது ஊடகங்கள் வழியாக நிலைநிறுத்திய ஆளுமைகளில் ஒருவராக சௌந்தரா கைலாசம் மதிப்பிடப்படுகிறார்.
சௌந்தரா கைலாசம்
