அன்புள்ள ஜெ
நான் அண்மையில் உங்கள் குகை என்னும் சிறிய நாவலை வாசித்தேன். அந்நாவல் சிறியதாக இருந்ததனால்தான் வாசித்தேன். நான் வாசிக்க ஆரம்பித்து ரொம்பநாளாகிறது. நிறுத்தி ரொம்பநாளாகிறது. 1991ல் எனக்கு சிலபிரச்சினைகள் வந்தன. நானே வரவழைத்துக்கொண்டதுதான். ஒருவருடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்தேன். பணம் இழப்பு. மானம் மரியாதை இழப்பு. குடி கஞ்சா என்று போனேன். அப்படியே மனச்சிக்கல்கள். இப்போது மீண்டு வந்துவிட்டேன். இலக்கியம்தான் துணைநின்றது. ஈஷாயோகா இல்லாவிட்டால் மீண்டிருக்கமாட்டேன்.
குகை நாவலை படிக்கும்போது என்னுடைய ஒரு காலகட்டமே வந்தது கண்முன்னால். நானும் அதே குகைகளில் அலைந்துள்ளே. அதேபோன்ற அனுபவங்கள். எல்லாத்துக்கும் அடியிலே சஞ்சரிப்பேன். எல்லாமே ஒரு கனவுபோல இருக்கும். அந்த சிக்கலையும் பிரச்சினைகளையும் மிக அற்புதமாக அந்நாவல் சொல்கிறது. அங்கே அவர் ஒருவரை பார்க்குமிடத்தில் திடுக்கிட்டு புத்தகத்தை கீழே போட்டுவிட்டேன்.
ஆனால் பிறகு ஒரு விஷயம் தோன்றியது. அது ஒரு துன்பமான விசயம்தான். ஆனால் அந்த நிலையில் நாம் வழக்கத்துக்கு மாறாக பலவற்றை அறிகிறோமில்லையா? அந்த ஞானம் பிரமையா? அதுக்கு ஏதாவது வேல்யூ உண்டா? சந்தேகமாக இருக்கிறது. அந்த நாவலும் அந்த சந்தேகத்துடனேயே முடிவதுபோல் இருக்கிறது.
ஒரு சின்ன கனவுமாதிரி இருந்தது நாவல்.
ஜி
குகைகளின் வழியே மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
குகைகளின் வழியே, குகை ஆகிய இரு நூல்களையும் வாசித்தேன். அந்தப்பயணம்தான் இந்த நாவலாக ஆகியது என நினைக்கிறேன்.
அரசன்