சதீஷ்குமார் சீனிவாசன் பேட்டி, கடிதங்கள்

”மறுக்க சாத்தியமே இல்லாததுதான் கவிதை” – சதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல்

அன்புள்ள ஜெ,

சதீஷ்குமார் சீனிவாசனின் நேர்காணல் படித்தேன்.வேறெந்த வகையிலும் இல்லாமல் எளிமையாக இருக்கும் அவரின் பதில் உண்டாக்கும் தாக்கம் மிகப் பெரியது.நேர்மையான மனிதர்கள் என்பவர்கள் கலையில் மட்டுமே சாத்தியம் போலும்.கல்வி என்பது ஒன்றுமேயில்லை என நிரூபித்திருக்கும் இன்னொரு ஆளுமை.

அவரின் குளியலறையை கனவு காணும் பெண் சித்திரம் நானே தான்.புரியாத வார்த்தைக் கோர்வைகளும், எதுகை மோனைகளும் மட்டுமே கவிதை என நம்பும் உலகில் என்னை என் மன நிலையை அச்சாக எழுத்தில் வடிப்பவனே என் மனம் உணரும் கலைஞன். சக்திவேல் எழுதிய கடிதத்திற்கு பிறகே சதீஷ்குமாரை வந்தடைந்தேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்நிறை நேரம் அவரின் எழுத்துக்களாலேயே நிகழ்ந்தது.

நன்றி.

சதீஷ்குமாருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

சரண்யா

திண்டுக்கல்.

அன்புள்ள ஜெ

சதீஷ்குமார் சீனிவாசனின் பேட்டி நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது. பேட்டி எடுத்தவரின் அக்கறையும் வாசிப்பும் உற்சாகமும் தெரிந்தது. இரண்டு இளைய தலைமுறையினரின் உரையாடல்போலவே இருந்தது. சதீஷ்குமார் சீனிவாசன் ஒரு கவிஞனுக்குரிய அலைக்கழிப்புகள் கண்டடைதல்கள் வழியாக வந்தவர் என்பதை காணமுடிகிறது

ராஜா குமரவேல்

முந்தைய கட்டுரைசவார்க்கர், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅமரர் சிவசுந்தரம் நினைவு தஞ்சைப் ப்ரகாஷ் இலக்கிய விருது- சுரேஷ் பிரதீப்