நூற்பு- உதவி

அன்பிற்கினிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

ஒரு உதவி கோரல்

நிறைய இடர்களை மாறி மாறி சந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு என சென்னிமலையில் உள்ள நாச்சிமுத்து நகரில் கட்டிக்கொடுத்த வீட்டில் நூற்பின் தொழிற்கூடம் அமைப்பதற்கான இடம் கிடைத்தது. இன்று வரை நிறைய அனுபவங்களை அந்த இடம் கொடுத்துக் கொண்டே கனவுகள் ஒவ்வொன்றும் செயலாக மாறுவதற்கான சூழலையும் அமைத்து கொடுத்திருக்கிறது. பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள்  மற்றும் பெரியவர்கள் என எல்லா வகையான மனிதர்களுக்கும் கைத்தறி குறித்த அனுபவத்தை தந்துகொண்டிருக்கிறது.

தற்பொழுது இந்த இடத்தில் இருந்து தொடர்சியாக செயல்படுவதற்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை கடந்து, இங்கிருந்து இயங்குவதற்கு ஒரு பெரும் தொகை தேவைப்படுகிறது. இத்தருணத்தை கடந்து விட்டால் நூற்பு இன்னும் வேகமாக செயல்படுவதற்கான சூழலாக இருக்கும். இந்த நெருக்கடியை கடக்க உங்கள் முன் ஒரு வேண்டுகோளுடன் இரு கரம் கூப்பி உதவி வேண்டி நிற்கிறேன்.

இத்தருணத்தில், நூற்பில் நெய்த கைத்தறி சேலைகள், சட்டைகள், சுடிதார், சட்டை மற்றும் பேண்ட் துணிகள் கூடுதலாக இருப்பு உள்ளது. தேவைப்படும் நண்பர்கள், பரிசு கொடுப்பதற்கோ அல்லது தங்கள் பயன்பாட்டிற்கோ ஒவ்வொருவரும் மொத்தமாக எடுத்துக்கொண்டால் பெரும் உதவியாக இருக்கும்.

நூற்பில்

165 சேலைகள்

100 எட்டு முழ வேட்டிகள்

50 பரமாஸ் வேட்டிகள்

50 நான்கு முழ வேட்டிகள்

30 வெளுக்காத சட்டைகள் (42 அளவு அரைக்கை சட்டைகள்)

30 துண்டுகள்

8 பஞ்சகஜ வேட்டிகள்

400 மீட்டர் சுடிதார், சட்டை மற்றும் பேண்ட் தைப்பதற்கான துணிகள்

100 மீட்டர் வெள்ளை நிற சட்டை துணிகள்

இவைகள் கையிருப்பு உள்ளது.

தேவைப்படும் நண்பர்கள் கீழ் உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வாழ்வின் என்றென்றைக்குமான நன்றியும்… பிரார்த்தனைகளும்…

சிவகுருநாதன்.சி,

9578620207

www.nurpu.in

முந்தைய கட்டுரைநாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?
அடுத்த கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசன் நேர்காணல், கடிதம்