மத அடையாளங்கள், அரசியல் -கடிதம்

ஜனநாயகத்தில் செங்கோல்

அன்புள்ள ஜெ,

சைவ ஆதீனங்கள் அளித்த செங்கோல் இந்தியாவின் பாராளுமன்றத்தில் இருப்பது தவறு என்று சொல்லியிருந்தீர்கள். இந்தியாவின் தேசியக்கொடியில் உள்ள அசோகச் சக்கரம் பௌத்தமதச் சின்னம்தானே? சாரநாத் சிங்கங்கள் மதச்சின்னங்கள்தானே? அவற்றை ஏன் செக்யுலர் அரசு தன் அடையாளங்களாக வைக்கவேண்டும்?

சிவக்குமார் பொன்னம்பலம்

அன்புள்ள சிவக்குமார்,

நீங்கள் ஒரு பக்கம் எடுத்துவிட்டால் இப்படிப் பேசிக்கொண்டே செல்லலாம். எதிர்ப்பை எல்லாம் மறுபக்கம் சார்ந்தவர்களின் காழ்ப்பு என விளக்கிக் கொள்ளலாம்.

தமிழகத்தின் சின்னம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம். கேரளத்தின் சின்னம் கஜலட்சுமியின் யானையும் அனந்தபத்மநாபனின் சங்கும். தெலுங்கானாவின் சின்னம் சார்மினார். ஆந்திராவின் சின்னம் அமராவதியிலுள்ள பூர்ணகும்பம்.இவையெல்லாம் மத அடையாளங்களாகப் பார்க்கப்படவில்லை. கலாச்சார அடையாளங்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. முன்வைக்கப்பட்டன. அவை ஏன் தேர்வுசெய்யப்பட்டன என விளக்கப்பட்டன. அவை மதச்சின்னங்களாக பார்க்கப்பட்டு அவ்வாறு முன்வைக்கப்பட்டிருந்தால் அது பிழை. அது ஒரு மதத்திற்குச் சார்பானது.

இங்கே பிரச்சினை எந்த மதச்சின்னங்களையும் பயன்படுத்தலாகாது என்பது அல்ல. மதச்சின்னங்களை அரசியலில் மதஅதிகாரத்தை புகுத்துவதற்காகப் பயன்படுத்துவதுதான்,

ஜெ

காந்தியதேசியம், மதம் கடிதங்கள்

அடிப்படைவாதம் கடிதம்

மடாதிபதிகள் -கடிதம்

செங்கோல் இந்து கடிதம்

செங்கோல்கள் கடிதம்

கடவுளும் ஆட்சியும்

செங்கோல் கடிதம்

காஞ்சிபெரியவர் சொன்னாரா?

முந்தைய கட்டுரைதூரன் விருதுகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாவண்ணன்