நாடற்றவன்

அ.முத்துலிங்கம்

நாடற்றவன் அ முத்துலிங்கம்

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் .முத்துலிங்கம் அவர்கள் எழுதியநாடற்றவன்என்ற கட்டுரையை படித்தேன், ஜெ. இக்கட்டுரை என்னுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

நீங்கள் இக்கட்டுரையை முன்னரே படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் தாழ்வில்லை, மீண்டும் ஒரு முறை படியுங்கள், ஜெ. அவ்வளவு அருமையாக இருந்தது.

வணங்கான் சிறுகதையில் யானைக்கு கீழே மூத்திரம் சிந்திக்கொண்டுக் கிடந்தவன், யானை மேலே ஏறி அமர்ந்து சென்ற பின் அவன் நடையே யானை போல ஆகுமேஅது போல.

முமு சிறுகதையில் கெராசிம், எசமானியாவது மயிராவது என்று நடந்தே தன் ஊருக்கு போய்சேர்வானே….அது போல.

சோற்றுக்கணக்கு சிறுகதையில் சாலையில் நின்ற பெண்ணின் முலையை கசக்கியவனை, கெத்தேல் சாகிப் செவிலிலேயே ரெண்டு வைப்பானேஅது போல. எனக்கு இன்னும் என்னென்னவோ தோன்றுகிறது, ஜெ.

மணிமாறன்

முந்தைய கட்டுரைநாம் ஏன் வரலாற்றை எழுதவில்லை?-2
அடுத்த கட்டுரைAsymptote, பிரியம்வதா