விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய இந்தியா 2020 என்னும் நூலை, சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கி எழுதினார் மா. கமலவேலன். முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார்.