சேதாரம்பட்டு சமணப்பள்ளி

ஒன்றன் மீது ஒன்றாகத் திகழும் பாறைகளு மேலுள்ளது முன்னோக்கி நீண்டிருப்பதாலும் கீழுள்ளது சற்று பள்ளமாக இருப்பதாலும் இந்த குகை ஏற்பட்டிருக்கிறது. இயற்கையாக அமைந்த இப்பள்ளமான குகைப்பகுதியில் சமணத் துறவியர் உறைந்திருந்தமையை அறிவுறுத்தும் வகையில் சில கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. பிற இடங்களிலுள்ள குகைப்பள்ளிகளில் காணப்பெறும் படுக்கைகளைப் போன்றே இவையும் வரிசையாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றுள் ஒன்றில் முக்குடை வடிவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சேதாரம்பட்டு சமணப்பள்ளி

சேதாரம்பட்டு சமணப்பள்ளி
சேதாரம்பட்டு சமணப்பள்ளி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாவியமுகாம், கடிதம்
அடுத்த கட்டுரை”ஈயைத் தூர ஓட்டு!”