திருக்குறுங்குடியில் நிகழ்ந்து வந்த கைசிக புராண நாடகம் காலப்போக்கில் அழிந்துவிட்டதைக் கண்ட சே.ராமானுஜன் 1996 முதல் வெவ்வேறு ஆவணப்பதிவுகளில் இருந்து அதை மீட்டெடுத்து மறு உருவாக்கம் செய்தார். இன்று திருக்குறுங்குடியில் நிகழும் பத்து நாள் கைசிக புராண நாடகம் சே. ராமானுஜத்தால் நாடகக் கலைஞர். ந. முத்துசாமி, பரத நாட்டிய கலைஞர் அனிதா ரத்னம் ஆகியோரின் உதவியுடன் புதியதாக உருவாக்கப்பட்டது.