அடிப்படைவாதம், கடிதம்

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன?

சவார்க்கரின் தியாகத்தின் மதிப்பென்ன? (2)

சவார்க்கர் கட்டுரை ஆங்கிலத்தில். மொழியாக்கம் ஐஸ்வர்யா. ஃப்ரண்ட்லைன்

அன்புள்ள ஜெமோ

 

Fundamentalism நீங்கள் நினைப்பதுபோல மாடர்னிஸம் சார்ந்தது அல்ல. அதன் தொடக்கம் இருப்பது புரட்டஸ்டண்டிஸத்தில்தான். அவர்கள்தான் லாஜிக், தனிமனிதவாதம் ஆகியவற்றுடன் மூர்க்கமான canonism எல்லாவற்றையும் கொண்டவர்கள். ஐரோப்பாவில் கத்தோலிக்கம் பழமைவாதமாகவும் புரட்டஸ்டண்டிஸம் அடிப்படைவாதமாகவும் இருந்தது. ஐரோப்பாவில் கத்தோலிக்கம் நிகழ்த்திய ஒடுக்குமுறைகள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் கண்மூடித்தனமான மதப்பற்று, மற்ற மதங்களை வெறுப்பது, கொள்கைகளை இரும்புப்பிடியாக பிடித்துக்கொண்டிருப்பது ஆகியவை புரட்டஸ்டண்டுகளால் உருவாக்கப்பட்டவை.

 

ஜோ.

 *

அன்புள்ள ஜோ,

 

மூர்க்கமான மதப்பற்று வரலாறு முழுக்க இருந்துகொண்டுள்ளது. அது இனப்பற்று, நிலப்பற்று போல அடையாளத்தை பிடித்துக் கொண்டிருப்பதுதான். அது மனிதனின் இனக்குழுக்களாகவும் பின்னர் நாடுகளாகவும் தொகுத்தமைத்த சக்தி. மாடர்னிஸம் என்று நான் சொல்வது மாடர்னிடியின் வளர்ச்சிக்காலத்தில் உருவான கொள்கைகளின் தொகுப்பை. அது உருவான பிறகுதான் இன்று நாம் அடிப்படைவாதம் என்று சொல்லும் ஒரு விசித்திரமான நிலைமை உருவானது. அதாவது ஏதாவது ஓர் அடையாளத்தைப் பற்றிக்கொண்டு மாறாமல் நின்றுவிடுவதற்கான மனநிலையும் அதற்கான தத்துவங்களும் கொண்டது அடிப்படைவாதம். ஆனால் அது தன்னை சீர்திருத்தம் என்றும் முன்னகர்வு என்றும் நம்பி அப்படி வாதிடவும் செய்யும். ’பின்னோக்கிய முன்னகர்வு’ என அடிப்படைவாதத்தை சரியாக வரையறை செய்துவிட முடியும்.

 

ஜெ

முந்தைய கட்டுரைகமலாதாஸ் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேனகா