வெண்முரசுக் குறிப்புகள் -கடிதம்

வெண்முரசுக்கு ஒரு கோனார் உரை

அன்புள்ள ஜெ,

வெண்முரசுக்கு ஒரு கோனார் உரை குறிப்பில் அளிக்கப்பட்டுள்ள ஸ்னிப்பெட்ஸ் பார்த்தேன். மிக முக்கியமான முயற்சி. வெண்முரசு என்றால் என்ன என்றும் அதன் மொழி என்ன என்றும் பரவலாகக் கொண்டுசேர்க்க உதவும். அதிலும் ஆங்கிலத்தில் இருப்பது இன்னும் உபயோகமானது. ஆனால் சில சின்ன பிரச்சினைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

இந்த படங்களுடன் வந்துள்ள பகுதிகள் சின்னதாக இருக்கவேண்டும். அப்போதுதான் எந்த ஃபார்மாட்டிலும் படிக்க முடியும். அப்படியே எடுத்துக்கொடுப்பதாக இருந்தால் ஒரு படத்தின்மேல் அமையக்கூடாது. தனியாக எக்ஸ்டென்ஷன் ஆக அமையலாம். அல்லது சுருக்கமான அழகான ஒரு பத்தி மட்டுமாக இருக்கலாம். அதை வாசிக்க எளிதாக இருக்கவேண்டும். வாசித்ததுமே நம்மைக் கவரவேண்டும்.

ஆங்கிலத்தில் ஆட்டமாட்டிக் மொழியாக்கமாக இருக்கக்கூடாது. சுருக்கமாக எவராவது மொழியாக்கம் செய்யலாம். ஒரு ஐம்பது அல்லது நூறு வரி போதுமானது. கூர்மையாக இருந்தால் நல்லது.  இளைய தலைமுறைக்கு வெண்முரசு போய்ச்சேரும்.

அன்புடன்

ஸ்ரீகாந்த்

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைகண்ணீரும் கதைகளும்
அடுத்த கட்டுரைஎந்த வழியில் நீ?